டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் பேசுகையில், “காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர். பாரதத்தில் தோன்றி அதன் சனாதனத்தின் கொடியை ஏந்திய ஆர்.எஸ்எ.ஸ் மற்றும் வி.ஹெச்.பிக்கு எதிராக இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டின் முன்னேற்றத்திற்காக சங்கம் பாடுபடுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.ஹெச்.பி சட்டம் மற்றும் அரசியலமைப்பின் படி செயல்படுகின்றன. இரண்டு அமைப்புகளும் பாரத்த்தில் தோன்றி அதன் சனாதன கலாச்சாரத்தை தாங்கி நிற்கின்றன. எனவே, இந்த அமைப்புகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது வெட்கக்கேடானது. வி.ஹெச்.பி அவருக்கு எதிராக எந்த வழக்கையும் பதிவு செய்து கவனத்தை திசை திருப்பாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், பாகிஸ்தானால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு ‘பக்வா ஆதங்வாத்’ (காவி பயங்கரவாதம்) என்ற பெயரில் சங்கத்தின் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. பாகிஸ்தானும் இதை சர்வதேச முன்னணியில் பயன்படுத்தியது. ஆனால் அந்த வழக்கு கூட நீதிமன்றத்தில் நிற்கவில்லை. இத்தகைய செயல்களில் சங்கத்தின் தொடர்புக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆர்.ஜே.டியின் சிந்தனையும் இதுதான். அவர்கள் தேசியவாதிகள் அல்ல. அவர்கள் ‘பாரத்மாதா கி ஜெய்’ என்று மக்களைத் தூண்ட மாட்டார்கள், ஆனால் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்றால் பரவாயில்லை. வாக்குகளை பெறுவதற்காக ஒருவர் எவ்வளவு கீழ்நிலைக்கு செல்லமுடியும் என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார்.