உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி – மத்திய தோல் ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் மெயின்புரியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “பாரதத்தின் தோல் உற்பத்தி தொழில் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில் முனைவோருக்கு உலகத்தரமான வாய்ப்புகளை அளிக்கிறது. இளைஞர்கள் தோல் உற்பத்திக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஈடுபட வேண்டும். பாரதத்தில் உள்ள தோல் உற்பத்தி நிறுவனம் அதிகளவிலான ஏற்றுமதி வருவாயை ஈட்டிவருகின்றன. நாட்டின் அன்னிய செலாவணியை ஈட்டும் முதல் 10 துறைகளில் இதுவும் ஒன்று. பாரதம், உலகில் காலணி உற்பத்தி மற்றும் தோல் ஆடைகள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்திலும், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் ஜந்தாம் இடத்திலும் உள்ளது. 2022ம் ஆண்டு சர்வதேச அளவில் தோல் பொருட்களின் சந்தை மதிப்பு 424 பில்லியன் டாலராக உள்ளது. இது 2030ம் ஆண்டுக்குள் 744 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.