தேச சிந்தனை நிறைந்த தொண்டர் மகா சக்தியின் விஸ்வரூபம்

ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா, நாகோர் (ராஜஸ்தான்), மார்ச் 11, 12, 13 – 2016

tab1

ஆர்.எஸ்.எஸ். என்று அறியப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 90 ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. அதாவது, நாட்டுக்காக சுய ஊக்கத்துடன் தொண்டாற்ற முன்வரும் அன்பர்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் அதிகரிப்பதன் அர்த்தம். இதோ ஒரு பார்வை வீச்சில் அந்த தேசிய சக்தியின் தெம்பூட்டும் வளர்ச்சி. 2015-16க்கான ஷாகா புள்ளி விவரம்: 36,867 ஊர்களில் தினசரி ஷாகா 56,859 (கடந்த ஆண்டு 33,233 ஊர்களில் 51,332 ஷாகாக்கள்). 13,784 வாராந்திர மிலன்கள் (கடந்த ஆண்டு 12,487) மாதாந்திர மண்டலிகள் 8,226 (கடந்த ஆண்டு 9,008). கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காகியிருக்கிறது, ஓரிரு வார காலம் வீட்டை விட்டு வந்து ஆர்.எஸ்.எஸ். விஸ்தாரகர்களாக பணிபுரிந்த ஸ்வயம்சேவகர்களின் எண்ணிக்கை: 2015-16: 14,592 (2014-15ல் 7,522).  மொத்தம் நடந்த 83 பண்புப் பயிற்சி முகாம்களில் (சங்க சிக்ஷா வர்க) முதலாண்டில், 17,835 இரண்டாவது ஆண்டில் 3,715, மூன்றாவது ஆண்டில் 875, முதலாவது ஆண்டு விசேஷ வர்கவில் 1,795, மூன்றாவது ஆண்டு விசேஷ வர்கவில் 611. ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடக்க நிலை பயிற்சி வகுப்புகள் (பிராத்மிக் சிக்ஷா வர்க) நாடு நெடுக நடைபெற்றது. 33,233 ஷாகாக்களிலிருந்து 1,12,520 ஸ்வயம்சேவகர்கள் இவற்றில் பயிற்சி பெற்றார்கள். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் 2016 மார்ச் 11,12, 13 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் நாகோர் என்ற ஊரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்கார்யவாஹ் (பொதுச் செயலர்) சுரேஷ் ஜோஷி வாசித்தளித்த அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டவை.

மாtab3ர்ச் 11 அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், சர்கார்யவாஹ் சுரேஷ் ஜோஷி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மூன்று நாள் பிரதிநிசபா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்கள். இதில் கல்வி, சுகாதாரம், சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தொடக்கத்தில் விஸ்வ ஹிந்து பரிஷதின் அசோக் சிங்கல், தமிழக சேவாபாரதியின் தலைவர் டாக்டர் கே.என். செங்கோட்டையன், தொழிற்சங்க தலைவர் ஏ.பி. பரதன், காஷ்மீர் முதலமைச்சர் முக்தி முகமது சயீத், முன்னாள் லோக்சபா சபாநாயகர்கள் பி.ஏ. சங்மா, பலராம் ஜாக்கர் உள்ளிட்ட பலருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக சென்னை பெருவெள்ளத்தின் போதும் வேறு இடங்களில் இயற்கை சீற்றங்களிலும் உயிர் இழந்த மக்களுக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கும் நமது எல்லைகளை பாதுகாத்த வீர மரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கும் சியாச்சின் பணிச்சரிவில் உயிர் இழந்த ஜவான்களுக்கும் சத்கதி கிடைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அகில பாரதிய பிரதிநிதிசபை கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, விஹிப தலைவர் டாக்டர் பிரவீண் தொகாடியா ராஷ்ட்ர சேவிகா சமிதியின் சாந்தா அக்கா, பாஜக பொதுச் செயலர்கள் ராம் மாதவ், ராம் லால், பாரதிய கிசான் சங்கத்தின் தினேஷ் குல்கர்னி, சுதேசி ஜாகரண் மஞ்சின் காஷ்மீரிலால், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சுரேந்திரன், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் சௌமேய ஜாரு, ஏபிவிபியின் சுனில் அம்பேகர், ரகுநந்தன், லகு உத்யோக் பாரதியின் பிரகாஷ் சந்த் உள்ளிட்ட சங்க ஊக்கத்தில் நடைபெறும் பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.tab2