சார்க் நாடுகள் பங்கேற்கும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அஸ்ஸாம் தலைநகர் குவாகாத்தி, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்றது. பிப்ரவரி 5ம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டுப் போட்டிகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த 2672 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியின் நிறைவில் இந்தியா 188 தங்கம், 90 வெள்ளி, 30 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 308 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாமிடத்தை ஆச்சரியப்படத் தக்கவகையில் இலங்கையும் மூன்றாமிடத்தை பாகிஸ்தானும் கைப்பற்றியது.
இரண்டாமிடம் பிடித்த இலங்கை 25 தங்கம், 63வெள்ளி, 98 வெண்கலத்துடன், 186 பதக்கங்களையும் மூன்றாமிடம் பிடித்த பாகிஸ்தான் 12தங்கம், 37வெள்ளி, 57 வெண்கலத்துடன் 106 பதக்கங்களை பெற்றது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் அதிக அளவிலாள பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை பெற்றிருப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக எப்போதுமே மல்லுகட்டிக் கொண்டிருக்கும். பாகிஸ்தான் இந்த முறை மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியா தடகளத்தில் 28 தங்கமும் பெற்றது. நீச்சல் போட்டிகளில் 23 தங்கமும் வில்வித்தை பேட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஆகிய போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக எதிரணியினர், ஒரு தங்கத்தைக் கூட போட்டிகளில் வெல்லவில்லை. இந்திய ஆடவர் ஹாக்கி அணி பாகிஸ்தனிடம் இந்திய கால்பந்து அணி நேபாளத்திடம் தங்கத்தைப் பறிகொடுத்ததும் விதிவிலக்கு.
இந்தியா, தற்போது கிடைத்துள்ள புதிய வீரர்களை நல்ல முறையில் பயிற்சி கொடுத்து எதிர்வரும் (2018 இந்தோனேஷியா) ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன் வெற்றிபெற முயலவேண்டும்.
இந்த போட்டித்தொடரில் பல, புதிய வீரர்கள் சாதனை புரிந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை எல். சூர்யா புதிய நட்சத்திரமாக பிரகாசிக்கிறார்.