திருப்பதியில் இன்று நடைபெறவுள்ள தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான், நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென்மண்டலக் குழுவின் 29வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையில் உள்ள பொதுவான சர்ச்சைகள், பிரச்சனைகள், எல்லை தொடர்பான சர்ச்சைகள், பாதுகாப்பு, சாலை, போக்குவரத்து, தொழில்கள், நீர், மின்சாரம், காடுகள், சுற்றுச்சூழல், வீட்டுவசதி, கல்வி, உணவு பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் ஒருமித்த வளர்ச்சியை அடைய ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மை மிக்க கூட்டாட்சி முறையை மேம்படுத்துவதற்கானத் தேவையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இத்தகைய ஒத்துழைப்பை தொடர் பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்கான அமைப்பு ரீதியான செயல்முறையின் மூலமும் உருவாக்குவதற்கான தளத்தை மண்டல குழுக்கள் வழங்குகின்றன.