மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், உயிரிழந்த தனது மகள் மற்றும் மகனின் கண்களை தானம் செய்த டீ கடைக்காரர்.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த மேட்டுப்பாளையம் நடூரில் டீக்கடை நடத்தும் செல்வராஜிக்கு இருபது வயதில் ஒரு மகளும், பதினைந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
மகள் நிவேதா கல்லூரியில் முதலாம் ஆண்டும்
மகன் ராமநாதன் பதினொன்றாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், நிவேதாவும் ராமநாதனும் உயிரிழந்தனர்.
நிவேதா, ராமநாதன் இருவரது உடலையும் பிரேதப் பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள், உயிரிழந்த நிவேதாவும் ராமநாதனும் சிறு வயதுள்ளவர்கள் என்பதால், அவர்களது கண்களை தானம் செய்ய முடியும் என, செல்வராஜிடம் கூறினர்.
இதற்கு சம்மதம் தெரிவித்த செல்வராஜ், தனது மகள் நிவேதா மகன் ராமநாதன் ஆகியோரின் கண்களை தானமாக வழங்கியுள்ளார்.
பிள்ளைகள் பலியான நிலையிலும், பிறருக்கு உதவிட வேண்டும் என்ற மன நிறைவோடு தனது பிள்ளைகளின் கண்களை தானமாக வழங்கிய செல்வராஜ், நீடூழி வாழஇறைவனை பிராத்திப்போம்