ஓரினச்சேர்க்கை திருமணம் பாரதக் கலாச்சாரத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி திரிபுராவின் அகர்தலாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பு திங்கள்கிழமை போராட்டம் நடத்தியது. “இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள மனுவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும். இந்த மனு சனாதன நம்பிக்கைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது” என்று வி.ஹெச்.பி அமைப்பின் திரிபுரா தலைவர் மகேந்திரபால் சிங் தெரிவித்தார். மேலும், “ஹிந்து திருமணச் சட்டம் 1954 புனிதமானது. சனாதன நம்பிக்கையின் அடிப்படையிலானது. அது மாறாமல் கக்கப்பட வேண்டும். அதனை மாற்ற நிர்பந்திக்கக் கூடாது. இந்த எதிர்பாராத எதிர்பார்ப்புக்கு அனைத்து துறவிகள் மற்றும் படித்த சகோதரத்துவங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன” என்று கூறினார். ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் இடையே இந்த போராடம் நடத்தப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, ‘LGBTQI+ சமூகத்திற்கான திருமண சமத்துவ உரிமைகள்’ தொடர்பா மனுக்களை கையாள்கிறது. இந்த மனுக்களை ஏப்ரல் 18ம் தேதி விசாரிக்கத் தொடங்கியது. இந்த மனுக்களுக்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.