புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தும் விதமாக ராகுல் காந்தி பேசி வருகிறார். ‘ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் உயிர் தியாகம் செய்த, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், 40 வீரர்களுக்கு வீரத் தியாகிகள் அந்தஸ்தை பிரதமர் மோடி அளிக்கவில்லை. அதே நேரத்தில் நாட்டுக்காக எதையும் தராத, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி யாக வாழ்வதற்காக, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அளித்துள்ளார். புதிய இந்தியாவை வரவேற்போம்!’ என கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியுள்ளார்.
ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி நாட்டிற்காக செய்த தியாகம் என்ன என்பதை யும், தனது தந்தை ராஜீவ்காந்தி ஆற்றிய தொண்டு என்ன என்பதையும் விவரிக்க வேண்டும். வெறும் இந்திரா காந்தியின் தந்தை வழி சொந்தங்கள் செய்த தியாகத்தை பெரோஸ் காந்தி குடும்பத்தினர் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
1975ல் அவசர நிலை பிரகடனப்படுத்திய பின்னர் நடத்திய அட்டூழியங்களின் சூத்ரதாரி சஞ்சய் காந்தி! இதுதான் நாட்டிற்கு செய்த தியாகமா?
அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி எதற்காக வெளிநாடு சென்றார் என்பதை எப்பொழுதாவது கூறியிருப்பாரா?
1977-ல் இந்திரா காந்தி தோல்வியுற்று, ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பாதுகாப்பு இல்லை என கூறி சோனியா காந்தி, தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இத்தாலி தூதரகத்தில் தஞ்சம் புகுந்த செயல் இந்திய திருநாட்டிற்கு செய்த தியாகமா–?
1971-ல் கிழக்கு பாகிஸ்தான் விடுதலைப் போரில் இந்திய ராணுவம் ஈடுபட்ட போது, தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகளுக்கு கூட விடுப்பு கிடையாது என்ற விதியிருந்தும், இந்தியன் ஏர்லைன்ஸ் பணியிலிருந்து ராஜீவ் காந்தி மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு, யுத்தம் முடியும் வரை இத்தாலிலேயே தங்கியிருந்தது தான் தேசத்திற்கு செய்த தியாகமா என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
கொச்சைப்படுத்தும் விதமாக அம்பானிக்கு விமான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதை விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி, அனில் திருபாய் அம்பானிக்குச் சொந்தமான ஸ்வான் காபிடல் கம்பெனியின் பங்குகள் டி.பி.ரியாலிடி கம்பெனிக்குச் சாதகமாக திடீரென மாற்றம் செய்யப்பட்டன. இந்த மாற்றம் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாகவே செய்யப்பட்டது. இதன் காரணமாக 2ஜி ஊழல் ஏற்பட்டது. இதை செய்தவர் ஆ.ராசா. தி.மு.க. தேசத்திற்கு என்ன தியாகம் செய்தார்கள்? கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்ய முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதி கொடுத்து, போபர்ஸ் ஊழலில் கொள்ளையடித்த குத்ரோச்சி, இந்திய தேசத்திற்கு என்ன தியாகத்தை புரிந்தார்?