தாய்மையின் வடிவே பசு ; மகான்களின் வாழ்வில்

ஒருநாள் நான் (சுவாமி ரங்கநாதானந்தர்) கல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் கல்ச்சர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். பிரெஞ்சு நாட்டினர் சிலர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம், இந்தியாவில் பசுவை தெய்வமாக வணங்குகிறீர்களே… ஆனால் எத்தனையோ மனிதர்கள் பட்டினியாலும் புரதச்சத்து குறைவாலும் இறக்கிறார்கள். அப்படியிருக்கும்போது பசுவை பராமரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நியாயம்தானா?” என்று கேட்டனர்.cow

நான் அவர்களை அமரச் சொன்னேன். பசுவை தெய்வமாக வணங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறேன் கேளுங்கள். வெகு காலத்திற்கு முன்பே குழந்தைகளுக்குத் தாய்ப் பாலுக்குப் பிறகு பசும்பால் கொடுப்பது வழக்கம். எனவே பசுவையும் தாயாக பாவிக்கும் எண்ணம் வளர்ந்தது. நாளடைவில் தாயுள்ளத்தின் அடையாளமாகப் பசுவும் கன்றும் கருதப்பட்டன. பல நூற்றாண்டுகள் பசுவையே மக்கள் தாய்மையின் வடிவமாகக் கருதி ‘கோமாதா’ (பசுத்தாய்) என்று அழைக்களாயினர். விவசாயத்திற்கும் பயனளித்ததால் பசுவை யாவரும் போற்றிப் பாதுகாத்தனர்.

இதுபோன்ற பல கருத்தாழம் நிறைந்த நடைமுறைப் பழக்கவழக்கங்களால் மனித சமுதாயம் பெற்றது வளர்ச்சியே தவிர வீழ்ச்சியல்ல. வயதான தாய் தந்தையர்களை சுமையாகக் கருதி யாரும் அவர்களைக் கொன்றுவிட நினைப்பதில்லை. அதனால்தான் ஒரு இந்தியன் தாய்க்கு தரும் மதிப்பையும் மரியாதையையும் பசுவிற்கு அளிக்கிறான்” என்று விளக்கமளித்தேன். அந்தச் சுற்றுலாப் பயணிகள் திருப்தியுடன் நன்றி கூறி விடைபெற்றனர்.”

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்