ஒரு தா ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின், தன் சுய விருப்பு வெறுப்புகளை விடுத்து, அந்த குழந்தைக்காகவே வாழத் தொடங்குகிறாள். நல்ல கலாசார பின்னணியில் உள்ள தா சமுதாயத்தைப் பற்றிய எண்ணத்துடன், தன் வாழ்வை இந்த சமுதாயத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தவ வாழ்க்கை மேற்கொள்கிறாள். அதிதி, ஜீஜாபா போன்றோர் சமுதாய சிந்தை நிறைந்த தாமார் இப்போதைய சமுதாயத்திற்க்கும் வழிகாட்டிகள்.
இன்றுகூட அனேக குடும்பங்களில் கணவன்மார்கள் சரியாக பெண்கள் தியாக வாழ்க்கையை மேற்கொண்டு, தன்மானமிக்க வாழ்க்கை வாழ்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் பெண்கள் வேலைக்கும் சென்று, வீட்டிலும் முழுபொறுப்பேற்று சிறந்த முறையில் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
நமது ஹிந்து குடும்பங்களில், மாதாமாதம் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, மாதப்பிறப்பு என்று பல பண்டிகைகள் உள்ளன. இவை ஒன்றிலும் குறைவில்லாமல் நேர்த்தியாகக் கொண்டாடி, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு பெண் ஏற்கும் காட்சி அற்புதம்.
எப்படிப் பார்த்தாலும் பெண்மை போற்றுதற்குரியதே. காலத்தின் கோலத்தால் பெண்மையின் கௌரவம் சிதைக்கப்பட்டு சீரழிவுக்கு ஆளானாலும், தியாகத்தில் தோந்த தாமையால் அதன் கௌரவம் தூக்கி நிறுத்தப்பட்டே தீரும்.