தலைவிரித்தாடும் ஊட அதர்மம் ராமர்களே, மாரீச மான்கள், உஷார்!

அன்றைய காங்கிரஸ் அரசின் ஆதரவாலும் குறிப்பாக ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவாலும் குஜராத்தின் முதல்வரா இருந்த பிரதமர் மோடி மீது பொ குற்றச்சாட்டுகள் சுமத்தி, நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பணியிலிருந்து இடைநீக்கம் செயப்பட்டிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், தனது டிவிட்டர் மூலம் இந்திய ராணுவத்திற்கு எதிராக அபாண்டமான பொ சோல்லி அவமானப்பட்டிருக்கிறார்.

காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த கலவரங்களில் ராணுவம் அமைதியை நிலைநிறுத்த பாடுபட்டு வந்த வேளையில், காவலர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட சிறுவயது பையன் கூட ‘உண்டி வில்’ எடுத்து போராடத் துவங்கியுள்ளான் என்றால், காஷ்மீர் விவகாரத்தில் நாம் எவ்வளவு தோல்வி அடைந்துள்ளோம் என்பதை உணரவேண்டும்” என்று கூறி, சிறுவன் ஒருவன் காவலர்களுக்கு எதிராkashmirக உண்டி வில் ஏந்தி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

போதாதா பாகிஸ்தான் ஊடகத்திற்கும் சமூக ஊடகத்தினருக்கும்? லட்சக்கணக்கில் இந்தப்படம் டிவிட்டரில் வலம் வரத் துவங்கிவிட்டது. பாலஸ்தீனிய குழந்தைகள் எப்படி இஸ்ரேலிய படைகளை எதிர்க்கின்றனரோ அதே நிலையில் தான் காஷ்மீரி குழந்தைகள் இந்தியப்படையை எதிர்க்கிறார்கள் போன்ற வர்ணனைகள் ஏராளம். உண்மையில் அந்தச் சிறுவன் காவலர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான் என்பது அவர்களின் முகங்களில் தவழும் புன்னகையே கூறிவிடும். அதுமட்டுமல்ல, இந்தப் புகைப்படம் விஷமச் செதியோடு வெளியான பின்னர்தான் அதன் உடனான பிற புகைப்படம் ஒன்றும் வெளியானது. அதில் அந்தச் சிறுவன் காவலர்களின் செயல்களை உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

சஞ்சீவ்பட்டின் நண்பர்கள் பலரும் கூட,

இது என்ன அநியாயம், காவல் சீருடை தாங்கி வலம் வந்த உங்களால் எப்படி இப்படி தேசத்துக்கு எதிராக பொய் சோல்ல முடிகிறது? முதலில் அந்த டிவிட்டை என புத்திமதி கூறினார்கள். எனினும் இதுவரை அவர் அந்த டிவிட்டை மாறாக அந்த டிவிட்டர் செய்தி பல்வேறு முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியா பற்றி அவதூறு பரப்ப பெரிதும் உதவிசெது விட்டது. தனிநபர் மோதல் காரணமாக தேசத்தையே அவமதிக்கும் இவர்களை காப்பாற்றி வரும்  சில மதசார்பற்ற ஊடகங்கள்” தான் இந்தியாவின் தோல்விக்கு பெரும் காரணங்கள் என்று சோல்ல வேண்டுமா என்ன? பர்கா தத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பாராட்டிய பாகிஸ்தானிய பயங்கரவாத இயக்கத் தலைவன் ஹஃபிஸ் சயீத் விரைவில் சஞ்ச பட்டையும் தனது பாராட்டு வழங்கல் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

கோப்ராபோஸ்ட் டாட் காம் தெகல்கா பத்திரிகையும் அதன் வலைத்தள பத்திரிகையும் வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது, தருண் தேஜ்பால், சக பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் கைது செயப்படுவதற்கு சற்றே முன்னர் துவங்கப்பட வலைத்தள ஊடகம். அனிருத்த பஹல் இதன் ஸ்தாபகர். இவரும் தருண் தேஜ்பாலும் நெருங்கிய சிநேகிதர்கள். ஆனாலும் வர்த்தகம் இவர்களைப் பிரித்தது. கொள்கை அளவில் இவர்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது. கேள்விக்கு பணம் வாங்கிய எம்.பி.க்கள் பிரச்சினை கோப்ராபோஸ்டின் மறைமுக படமெடுப்பினால் விளைந்ததுதான். அன்றும் இன்றும் இவர்களின் குறி பாஜக தான்.

தற்போதைய காஷ்மீர் கலவரம் பற்றி இவர்கள் தங்கள் ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் உறையவைக்கும் இந்திய ராணுவத்தின் பயங்கரவாதம். காஷ்மீர் மக்கள் எப்படி ஒரு பாதுகாற்ற சூழலில் உள்ளனர் என்ற சர்ச்சை எழுப்பும் காட்சிகள்” என்றும்  இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் இருவரின் உதவிக்குரல் கேட்டு ஓடோடிச் செல்லும் ராணுவம், இடிபாடுகளை அகற்றிப் பார்க்க, சிக்கிய அந்த நபர் தாடியோடு (இஸ்லாமிய அடையாளம் எனக் கொள்க) காட்சி தர, மீட்ட ராணுவமே துப்பாக்கி குண்டுகளால் அவரை தீர்த்துக்கட்டும் காட்சி அதிர்ச்சி தருகிறது. அவர் பயங்கரவாதி என்பதற்கு என்ன ஆதாரம்? ஒரு அப்பாவி உயிர்

போயிற்று, ஒரு பிரஜையை நாம் இழக்கிறோம், ஒரு சமுதாயம் வஞ்சிக்கப்படுகிறது” என்று நீட்டி முழங்கி அந்த வீடியோ பற்றி வர்ணித்துள்ளனர்.

அந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொரு சாமான்யனும் அதை உண்மை என்றுதான் நம்புவான். அவனுக்கு இந்திய ராணுவத்தின் மீது கோபம் வரும். அப்படித்தான் அந்தக் காட்சிகள் உள்ளன. ஆம், காட்சிகள் உண்மையானவை. ஆனால் அது பற்றிய செதியோ வர்ணனையோ, முற்றிலும் பொயானவை.

உண்மை இதுதான்: அந்த வீடியோ ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒன்று. கொல்லப்பட்டவன் பாகிஸ்தான் நாட்டுக் குடிமகனான, பயங்கரவாத அமைப்பான ஜெஸே-மொகமத் தின் தலைவன். பெயர் அஸன் பா. இந்த குட்டை உடைத்திருப்பது நியூஸ் எக்ஸ் ஊடகம்.

ஐந்தாண்டுக்கு முன்பு ஒரு என்கவுண்டரின் போது நடந்த சம்பவம். அப்போது இடிபாடுகளுக்கும் மாட்டிக் கொண்ட அவனை மீட்க ராணுவம் செல்கிறது. இடிபாடுகளை அகற்றும்போது அவனது ஒரு கையில் கிரனேடு வெடிகுண்டு இருப்பதையும் அவன் மீண்டு வந்தவுடன் அதை எறிந்துவிடும் வாய்ப்பும் இருப்பதை அறிந்து, அவனை கையில் உள்ள துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்கிறார்கள். இதே வீடியோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்.டி.டி.வியிலும் ஒளிபரப்பாகி இருந்தது. அப்போது இதே ஊடகங்கள் அன்றைய அரசைப் பார்த்து ஒரு பாகிஸ்தானி குடிமகனை, ஒரு பயங்கரவாத இயக்கத் தலைவனை கொல்லாமல் பிடிக்கும் வாப்பு கிடைத்தும் நம் ராணுவம் அவனைக் கொன்றதால் சாட்சிகளை பெற முடியாமல் போயிற்று, இது நியாயமான நடவடிக்கையா என்று கேட்டிருந்தன.

தவறாக ஒரு விஷயத்தைச் செய்வது என்பது வேறு. தெரிந்தே ஐந்தாண்டுக்கு முந்தைய வீடியோவை வெளியிட்டு இன்று நடந்தது போல சித்தரிப்பது என்பது வேறு. இந்திய ராணுவத்திற்கு எதிராக, அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய் பரப்பியுள்ளது கோப்ரா போஸ்ட். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது மத்திய அரசு?