அதிக நகர்ப்புறங்களை உடைய மாநிலங்களில் அமைந்துள்ள நகரங்களில் எந்த அளவுக்கு சுத்தம், சுகாதார வசதிகள் பராமரிக்கப்படுகின்றன என்பதை ‘ஸ்வச் சர்வேக்சன்’ திட்டம் வாயிலாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் டி.ஆர்.பாலு கேள்விக்கு பதில் அளித்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கௌஷல் கிஷோர், ‘நம் நாட்டில் 100க்கும் அதிகமான நகர்ப்புற அமைப்புகளை உடைய 13 மாநிலங்களில், தமிழகம் 12வது இடத்தில் உள்ளது என்பது ‘ஸ்வச் சர்வேக்சன்’ திட்டத்தின் வாயிலாக தெரியவந்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு 1,200 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேசம் முழுதும் இத்திட்டத்திற்கு என மத்திய அரசு, ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது’ என தெரிவித்தார்.