கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி இருவரும் இணைந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஸ்வாதி மலிவால்தாக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிப்பதிவு அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டிலிருந்து காணாமல் போனது மற்றும் பிபவ் குமார் கைது செய்யப்பட்டது ஆகியவை அர்விந்த் கேஜ்ரிவால் இந்த குற்றங்களுக்கு துணைபோனதை உறுதிப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மலிவால் தானாக முன்வந்துதான் போலீஸில் புகார்அளித்தார்.
இந்த விவகாரத்தில் இது வரை கேஜ்ரிவால் மவுனம்சாதிப்பதை கண்டு பொதுமக்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரது இறுக்கமான மவுனத்திலிருந்தே ஆம் ஆத்மிகட்சி டெல்லிக்கு எதிரானது, பெண்களுக்கு எதிரானது என்பது நிரூபணமாகிவிட்டது. பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது: டெல்லி நகரம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்துவதை தலையாய கடமையாகக் கொண்டிருப்பதாகக் கூறியவர் அர்விந்த் கேஜ்ரிவால். கடைசியில் அவரது வீட்டில்கூட சிசிடிவி கேமரா வசதிஇல்லை. டெல்லி முன்னாள்துணை முதல்வர் மணீஷ் சிசோடியாஅதிகார துஷ்பிரயோகம் செய்ததாக டெல்லி உயர் நீதிமன்றம்குற்றம்சாட்டியது. அப்போதுஅவரை எப்படியாவது ஜாமீனில்விடுவித்துத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்ல ஆம்ஆத்மி முயலவில்லை. ஆனால்,கேஜ்ரிவாலின் ரகசியங்களைஅறிந்த பிபவ் குமாரை காப்பாற்றதலைகீழாகத் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.