‘டெங்குவால் ரத்த தட்டணுக்கள் குறைந்தாலும் சித்தா மருத்துவத்தால் காப்பாற்ற முடியும்’

 

டெங்கு காய்ச்சலில், ரத்த தட்டணுக்கள் 20,000க்கு கீழ் குறைந்து, ஆபத்தான நிலைக்கு சென்ற நோயாளியையும், சித்தா மருத்துவ சிகிச்சையில் காப்பாற்ற முடியும் என, சித்தா டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இரு மாதங்களாக, ‘ப்ளூ, டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வடகிழக்கு பருவ மழையை ஒட்டி, அடுத்த மூன்று மாதங்களில், டெங்கு போன்ற காய்ச்சலின் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் வாயிலாக தற்காத்து கொள்ளலாம் என்கின்றனர், சித்தா டாக்டர்கள். மழைக்கால காய்ச்சலில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாத்து கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். துாதுவளை சூப், கற்பூரவள்ளி ரசம், முருங்கை – கத்திரிக்காய் காரக்குழம்பு, இஞ்சித்தேன் ஊறல், துளசித்தேனீர், திப்பிலி ரசம் என வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை தினமும் சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் சிறந்தது. பாலில், சுக்கு, அதிமதுரம், மஞ்சள் சேர்த்து கொடுக்கலாம். ஆடாதோடை சாறில் தேன் கலந்து கொடுக்கலாம். தாளிசாதி மாத்திரையை மிட்டாய் போல் சாப்பிட கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காயச்சல் வந்தால், டாக்டரின் ஆலோசனையின்றி, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ள கூடாது.

டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் ஆரம்பத்தில், கபசூரக்குடிநீர், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு பருகலாம். ரத்த தட்டணுக்கள் குறைந்து, ரத்தக்கசிவு ஏற்படும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் மருத்துவ ஆலோசனைப்படி சித்த மருந்தான ‘இம்பூரல்’ மாத்திரை சாப்பிடலாம். ரத்த தட்டணுக்கள் 20,000க்கு கீழ் குறைந்து, ரத்தக்கசிவு ஏற்பட்டு மிகுந்த ஆபத்தான நிலையில் டாக்டர்கள் கைவிட்டாலும் நோயாளியை சித்தா மருத்துவத்தால் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கஷாயம் சாப்பிடும் அளவு!

கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம்வயது – அளவு5 முதல் 10 – 15 மி.லி.,10 முதல் 15 – 30 மி.லி.,15 முதல் 50 – 50 மி.லி.,பப்பாளி இலைசாறுவயது – அளவு5 முதல் 10 – 5 மி.லி.,10 முதல் 15 – 10 மி.லி.,15 முதல் 50 மேல் – 15 மி.லி.,***