தீமைகள் என்று சொன்னோம் என்றால் சொல்ல வந்த கருத்தை பார்க்காமல் வாசகர்கள் விவாதத்திற்குள் செல்லும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அப்படிப்பட்ட காந்த சக்தியில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். முன்பெல்லாம் தங்களுடைய பொழுது போக்கு என்று உள்ள நேரங்களில் அக்கம் பக்கத்தினருடன் உரையாடிக் கொண்டு அவர்களுடன் விளையாடிக் கொண்டும் புதுப்புது சிந்தனைகளுடன் மக்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு கை வேலைகளும் செய்து கொண்டு பொழுதை போக்கினர். சில திரைபடங்களை அவ்வப்போது பார்ப்பார்கள். பொழுதுபோக்கு அம்சம் என்பது பலவகையிலும் மனது, அறிவு, சிந்தனை எல்லாவற்றையும் சிறப்பாக உபயோகிக்கக்கூடிய விஷயமாக இருந்தது.
இத்தகைய பொழுதுபோக்குகள் நாம் வாழ்வில் எந்தவித எதிர்மறை தாக்கத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் நமது வாழ்க்கையில் அன்பு, பாசம், குணம், கலாசாரம், அணுகுமுறை, பாரம்பரியம் மாறாமல் இருந்து வந்தது.
இன்று தொலைக்காட்சிகளில் குடும்ப சீரியல் என்ற பெயரில் மக்களின் நேரங்களை கபளீகரம் செய்வதோடு இல்லாமல், அவர்களுடைய சிந்தனையையும் பாழ்படுத்தி வருகிறது.
முன்பெல்லாம் மேடை நாடகங்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு மக்களுக்கு கொடுக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் வந்த பின் எல்லாமே இயந்திரத்தனமாக மாறி விட்டது. நவீன வளர்ச்சியால் மனிதனும் தன் இயல்பான வாழ்க்கையை இழந்து விட்டான்.
எதுவுமே எளிதாக கிடைத்து விடுகிறபடியால் சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கையாக மாறிவிட்டது. எந்நேரமும் டென்ஷன் ஏற்படுகிறது. இதை குறைத்து கொள்ள ‘டிவி’ சீரியல்களில் கவனம் செலுத்தி காலம் கழிக்கின்றனர் சிலர். 24 மணி நேரமும் ‘டிவி’யே கதியாக இருப்பவர்களும் உண்டு.
‘டிவி சீரியல்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும் அமைய வேண்டுமே தவிர பார்ப்பவர்களின் மனநிலையை மாற்ற கூடாது. சீரியல்களில் வரும் கதாபாத்திரம் போல் ஒரு சில பெண்கள் தங்களை சித்தரித்து கொள்கின்றனர். அதன் விளைவு குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஒருவரின் மன நிலையையே மாற்றும் ஒன்று நமக்கு தேவையா என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.
டிவி சீரியல்களை விடாமல் பார்ப்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளை கவனிப்பதில்லை. இதனால் அவர்களின் படிப்பு மட்டும் அல்லாமல், வேறு சில தவறுதல்களை செய்ய வைக்கிறது. பிள்ளைகளின் தினசரி படிப்பு பாதிக்கப்பட்டு தற்போது வரும் சீரியல்களில் அதிகப்படியான உறவு முறைகளை தவறாக காட்சி படுத்துகின்றனர்.சமுதாய சீர்கேடிற்கு வழி வகுக்கிறது.
வீட்டில் உள்ள வயதானவர்களிடம் அன்பாக பேசிக்கொண்டும், மரியாதை கொடுத்துக் கொண்டும் குழந்தைகளை அவர்களோடு பழக விட்டு ஒருவரோடு ஒருவர் புரிதலோடும் இருந்தால் நேரத்தை செலவிட ஆயிரம் வழிகள் பிறக்கும் என்பது உண்மை.
சீரியல்களை பார்ப்பதால் நம்மை அறியாமலே மனதில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி விடும். இதனால் குடும்பங்களில் பிரச்சினைகள் புதிது புதிதாக முளைக்கிறது. உறவு முறைகளுக்கு வேட்டு வைக்கும் சீரியல்கள் பார்ப்பதை தவிர்ப்போம். F