ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு – ஒரே நாடு, பல கேள்விகள்!

கிட்டத்தட்ட வியாபாரத்தில் இருக்கும் அனைவரும் ஊர்ஜிதம் செய்துவிட்டார்கள் GSTயால் தங்களுக்கு நன்மையே என்று. ஆனால், அடுத்தவன் பிழைப்பில் மண்ணை போடும் கட்சிகள் மட்டும் GSTயை திட்டிக் கொண்டிருக்கின்றன. தெருவில் வண்டிக்காரரிடம் வாழைப்பழம் வாங்கலாம் என்று விலை கேட்டால், ‘சார், வெலையெல்லாம் ஏறிப்போச்சு சார். GST வந்துருச்சு’ என்கிறார். அதுக்கும் உனக்கும் என்னய்யா சம்பந்தம் என்றேன். அதெல்லாம் கேக்காதீங்க. இனிமே எல்லாமே விலை ஏறிடும் என்கிறார்.

22 மாநிலங்களில் செக் போஸ்டுகளை எடுத்துவிட்டார்கள். இனி நேரம், டிரைவர் பேட்டா, கொண்டுவந்து சேர்க்கும் லாரி நேரம், டீசல், வண்டி வாடகை எல்லாம் மிச்சம். அது அப்படியே நுகர்வோருக்கு போகும். TVS நிறுவனம் வாகனங்களில் 350 முதல் 4,500 ருபாய் வரை விலை குறைத்துள்ளது. லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் மோடியை கும்பிடுகிறார்கள். யாரையும் நம்பவேண்டாம். உங்கள் வீட்டு மளிகை பொருள் பில்லை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதமும் அதே எடையில், அதே பொருளை வாங்குங்கள். தெரிந்துவிடும்.

அடிப்படையில் எந்த பொருளின் விலை உயர்ந்தது, எதனால் உயர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், சும்மாவேனும் விலையை ஏற்றிவிட்டு விளையாட்டு காட்டுகிறார்கள் வணிகர்கள். சில நாட்களுக்கு எந்த பொருளும் வாங்குவதில்லை, எந்த உணவகத்துக்கு செல்வதில்லை, எந்த செலவும் செய்வதில்லை என்று இருந்தால் போதும். விலையை இறக்குவார்கள்.

– ஆனந்த் வெங்கட்

பிட்சாவுக்கு 5 %, கடலை மிட்டாய்க்கு 18 % ஜி எஸ் டி !! இதுதான் இன்று பல இடங்களில் பரப்புரை செய்யப்படுகின்றது. ஆனால் இந்த வரி விதிப்பின் பின்னால் எத்தனை அற்புதமான ஒரு திட்டமிடுதல் பாருங்கள்:

பிட்சா எனும் இத்தாலிய உணவு நம் குடிசை தொழில் அல்ல. மாறாக கடலை மிட்டாய் என்பது நம் குடிசை தொழில்.  கடலை மிட்டாய் தயாரிக்கும் குடிசை தொழில்களுக்கு இருபது லட்சம் விற்றுமுதல் வரை ஜி எஸ் டி இல்லை.  இந்நிலையில் இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் பிராண்டட் கடலை மிட்டாய் விற்கும் நிறுவனங்கள், அந்த தொழிலில் ஈடுபட்டு வரும் சின்னஞ்சிறு குடிசை தொழில் நிறுனங்களை அழித்து விடும். ஆகையால் அரசாங்கத்துக்கு சிறு குடிசை தொழில்களை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் பிராண்டட் கடலை மிட்டாய் விற்கும் நிறுவனங்கள், கடலை மிட்டாய் விற்று பிழைத்து கொண்டிருக்கும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விடக் கூடாது என்று இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

– கேசவன் பார்த்தசாரதி

வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர், ‘நாளை முதல் ஒரு கேனுக்கு 5 ரூபாய் அதிகம் இனிமேல் ஒரு கேன் 40 ரூபாய்’ என்றார் என் மனைவியிடம். பேப்பர் படித்துக்கொண்டிருந்த நான் தலையைக்கூட நிமிர்த்தவில்லை. அவர் சமாதானமாகவோ என்னவோ ‘எல்லாம் இந்த மோடி பண்றது’ என்றார். நான் எதுவுமே சொல்லவில்லை. இந்த மனிதர் சுமார் பத்து வருடங்களாக இந்தத் தொழில் செய்துவருகிறார். என் வீட்டுக்குக் கடந்த 3 வருடங்களாக இவர்தான் தண்ணீர் சப்ளை. ஒருமுறைகூட தண்ணீருக்கு பில்லோ எதுவுமோ தந்ததில்லை. இது ஒரு முறைசாரா தொழில். முறையான பதிவு இப்போதுவரை இல்லை. ஒருவேளை இருந்தாலும் விற்கும் எல்லா கேனுக்கும் வரி கட்ட மாட்டார்கள். ஒரு பத்து சதவீத கேனுக்குத்தான் வரி கட்டுவார்கள். அப்புறம் ஏன் எல்லோருக்கும் விலை ஏற்றுகிறார்கள்? ஜி.எஸ்.டியின் பெயர் சொல்லி பொருட்களின் விலையை ஏற்றி இருக்கும் வணிகர்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவர்கள்தான். இந்த நல்லபிள்ளைகள்தான் அறச்சீற்றம் கொண்டு அரசுகளை சாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊழல் ஒழிய வேண்டும் என்கிறார்கள்.

* GSTயால் டீ விலை ரூ.8 லிருந்து ரூ.10 ஆகவும் காபி ரூ.10 லிருந்து ரூ.12 ஆகவும் விலையேற்றப்பட்டுள்ளதே?

பால் – வரி விலக்கு, சர்க்கரை – 5% வரி. முன் 6%, டீ, காபி தூள் – 5% வரி. முன் 6%.

ஆகையால் டீ, காபி விலையேற்றம் விற்பனையாளர்களின் தன்னிச்சையான முடிவு.

* தங்க பிஸ்கட்டுக்கு 3%, நாங்க திங்கிற பிஸ்கட்டுக்கு 18%?

GSTயில் பிஸ்கட் 32 சதவீதத்திலிருந்து 18 ஆக குறைந்துள்ளது. இதை மறைத்துவிட்டு தங்கத்தோடு ஒப்பிடுவது முறையாகாது.

* பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 18% வரி போடுவதா?

பெரும்பாலும் சுய உதவி குழுக்கள்தான் இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் சிறு குறு தொழிலாகவும் செய்யப்படுகிறது. 20 லட்சம் ரூபாய் விற்றுமுதல் வரை இதற்கு வரிவிலக்கு. 20 – 70 லட்சம் வரை turnover இருந்தால் 2% வரி. ஒரு வேலை இதற்கு வரிவிலக்கு அளித்தால் இதை ப்ராண்டாக விற்பனை செய்யும் பெரு நிறுவனங்களிடம் போட்டிபோட முடியாமல் இந்த சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர்.

* ஹோட்டல்களில் அதிக வரி வசூலிக்கப்படுகிறதே?

GSTக்கு முன்னால் உணவகங்களில் 14.5% VAT, 5.6% service tax, swach bharath, krish kalyan tax என 20.5% வரை வரி செலுத்தினோம். அனால் தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* 28% வரி போடுவதா?

GSTயில் 81 சதவீத பொருட்கள் 18% வரிக்குள் வந்துவிடும். அத்தியாவசியத்தை தாண்டி சொகுசு என்ற வரையறையின் எல்லையை நெருங்கும் போதுதான் 28% வரி வசூலிக்கப்படும்.

* எதைத்தான் வரி இல்லாம கொடுப்பீங்க?

அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால் போன்றவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

(தகவல்: இருங்கோவேள்)

ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும். அது வெறுமனே வாக்குறுதியாக இல்லாமல் சட்டமாகவே இருக்கவேண்டும் என்பது தான் மாநிலங்களின் கோரிக்கை.

காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. பிஜேபி வந்தவுடன் அது முழுமையாக ஏற்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திலேயே அந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வரி இழப்பை சமாளிக்க தனியே நிதி ஏற்படுத்தப்பட்டு அதிலே அதிக வருவாய் சேர்க்கப்படும். மாதா மாதம் 5 ஆம் தேதி மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்படும். இதை மோடி தான் செய்திருக்கிறார். இது 5 வருடங்களுக்கு. கூடவே மிக வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்கள் தேவைப்பட்டால் 2 வருடங்களுக்கு 1% வரியும் போட்டுக் கொள்ளலாம் என்பதையும் மோடி தான் ஏற்றார். மாநிலங்களின் கோரிக்கையான பெட்ரோல், மது, மின்சாரம் போன்றவற்றை வெளியே வைக்கவேண்டும் என்பதும் மோடி அரசால் தான் ஏற்கப்பட்டது.

– கேசவ ராமன்

***********************************

பட்டயக் கணக்காளர்களே, உங்களால் வரி செலுத்தாமல் இருப்பவர்கள் அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது உங்களால் அதிகமாக வரி செலுத்தும் ஒழுங்கான குடிமக்கள் அதிகமாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்”.

 

 

ஆடிட்டர்கள் சபையில் பிரதமரின் பேச்சு

***********************************