சந்தையில் காலூன்ற போராடி வரும் பி.எஸ்.என்.எல் என்ற அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனத்தை மீட்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடமிருந்து ஜூலை 27 அன்று ரூ. 1.64 லட்சம் கோடி மதிப்பிலான மிகப்பெரிய மறுமலர்ச்சிப் பொதியை வழங்கியது. இதுகுறித்த பி.எஸ்.என்.எல் மூத்த நிர்வாகிகளுடனான சந்திப்பில் பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “பி.எஸ்.என்.எல் ஊழியர்களை அரசு ஊழியர்கள் என்ற மனப்பான்மையை விட்டுவிட்டு சிறந்த முறையில் செயல்படுங்கள் அல்லது சென்றுவிடுங்கள். செயல்படாதவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த இறுதி எச்சரிக்கை குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம். உங்களிடம் எதிர்பார்ப்பதை நீங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில், ‘பேக் அப்’தான். வேலை செய்யாதவர்கள் வி.ஆர்.எஸ் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகலாம். வி.ஆர்.எஸ் எடுப்பதில் அவர்கள் எதிர்ப்பைக் காட்டினால், நாங்கள் முன்கூட்டியே ஓய்வு அ பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சிறப்பாக செயல்படும் 62,000 பணியாளர்கள் இருக்க வேண்டும். இனி இதுதான் வழக்கமானதாக இருக்கும், மேலும் புதிய இயல்பாக இருக்கும். எம்.டி.என்.எல்லின் கட்டுப்பாடுகள் மற்றும் அது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதற்காக நாங்கள் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வோம். அடுத்த படிகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்போம்” என்று கூறினார்.