செப்டம்பரில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோதமானவை, தடை செய்யப்பட்டவை என மத்திய அரசு என்று அறிவித்தது. இந்த விவகாரத்தில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு எதிராக உறுதிமொழிப் பத்திரங்களின் வடிவம் கோரப்பட்டது. அவ்வகையில், சூஃபி இஸ்லாமிய வாரியம் இந்த விஷயத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் பி.எப்.ஐ அமைப்புக்கு எதிரான ஆதாரங்களை பட்டியலிட்டுள்ளதுடன் அதன் மீதான தடையையும் ஆதரித்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளில் பி.எப்.ஐ’யின் ஈடுபாடு, துருக்கிய ஐ.ஹெச்.ஹெச், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா, எம்.பி உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடனான தொடர்புகள், சர்வதேச சதிச்செயலிகளில் கூட்டு, துருக்கி உள்ளிட்ட முஸ்லிம் நாட்டு அரசியல்வாதிகளுடனான தொடர்புகள், அதற்கான ஆதாரங்கள், கடிதப் போக்குவரத்துகள் போன்ற பல்வேறு சம்பவங்கள், ஆதாரங்கள் பட்டியலியடப்பட்டு உள்ளன.