சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் இதழ்களின் பங்கு

சுதந்திரப் போராட்டத்தில் சுதேசி மொழிகளில் வெளிவந்த இதழ்களின் பங்கு அளப்பரியது. சுதந்திரப் போரில் தமிழ் இதழ்கள் ஆற்றிய பங்கு மிகவும் விசாலமானது, ஆழமானது, செறிவானது. எல்லா இதழ்களையும் பற்றி விவரிக்க அவகாசம் இல்லாததால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய பத்திரிகைகளைப் பற்றி கூர்ந்து நோக்குவோம்.

திரு.வி.க., ‘தேசபக்தன்’, ‘நவசக்தி’ ஆகிய இதழ்களை ந india-vijaya-old-magazine  டத்தினார். அவர் ஆன்மிக வாதியாகவும் தொழிலாளர்களின் தோழராகவும் திகழ்ந்தபோதிலும் சுதந்திரப் போராட்டத்திற்கு அவரது எழுத்து ஊக்கமும் ஊட்டமும் அளித்தது. அதுமட்டுமல்லாமல் அரவிந்தர் நடத்திவந்த ‘வந்தேமாதரம்’ இதழை சென்னைக்கு வரவழைத்த திரு.வி.க. மக்களிடம் அதைப் படித்துக் காண்பித்து சுதந்திர கருத்துகள் பரவ வழிவகை செய்தார்.

மகாகவி பாரதி

பாரதியார் தலைசிறந்த கவிஞர் மட்டுமல்ல, ஒப்பற்ற செய்தியாளரும் ஆவார். தமிழில் கேலிச்சித்திரம் எனப்படும் கார்ட்டூனை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை பாரதியாருக்கே உண்டு. சுதேசமித்திரனில் பாரதி எழுதிய கனல் கக்கும் கட்டுரைகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனங்களாக விளங்கின. ‘இந்தியா’, ‘விஜயா’ உள்ளிட்ட இதழ்களையும் பாரதியார் தன் எழுத்தாற்றலால் மக்களிடையே பிரபலப்படுத்தினார்.

சுப்பிரமணிய சிவா, வ.வே.சு ஐயர் போன்றோரும் இதழ்களின் வாயிலாக சுதந்திரப் போராட்டத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்தனர். வ.வே.சு ஐயர் சிறுகதையின் பிதாமகனாகவும் கருதப்படுகிறார். அவர் ‘பாக்கிய லட்சுமி’ என்ற பெயரில் நடத்திய பத்திரிகை தனித்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. சுப்பிரமணிய சிவா ‘இந்திய தேசாந்திரி’, ‘பிரபஞ்ச மித்திரன்’, ‘ஞானபானு’ ஆகிய இதழ்களை நடத்தினார்.

‘தினமணி’ நாளிதழை தொடங்கிய தஞ்சை தரணியைச் சேர்ந்த சதானந்த், ஆங்கிலேயர்களுக்கே சவால் விடும் வகையில் ‘த பிரி பிரஸ் நியூஸ் ஏஜென்சி’ என்ற செய்தி நிறுவனத்தையும் நடத்தினார். ‘பிரி பிரஸ் ஜெர்னல்’ என்ற ஆங்கில நாளிதழையும் அவர் நடத்தினார்.

ஏ.என். சிவராமன்

தினமணியின் முதல் ஆசிரியராக செயல்பட்டவர் சொக்கலிங்கம். பத்திரிகை உலகின் பிதாமகன் என்றே அவர் maposi-aens-thiruvikaகருதப்படுகிறார். தினமணியின் தொடக்க கால வளர்ச்சிக்கு வித்திட்டவர் சொக்கலிங்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.  பொருளாதார  நெருக்கடி ஏற்பட்டதையடுத்து இந்தியன் எக்ஸ்பிரசும் தினமணியும் ராம்நாத் கோயங்காவின் கைக்கு மாறின. சொக்கலிங்கத்திற்குப் பிறகு ஏ.என். சிவராமன் தினமணி நாளிதழின் ஆசிரியரானார். பன்மொழி வித்தகரான அவர் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். நெடுங்காலம் தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் என்ற சிறப்பு ஏ.என். சிவராமனுக்கு உண்டு.

‘காந்தி’ என்ற பெயரிலேயே சொக்கலிங்கம் பத்திரிகை நடத்தினார். காந்தி என்றால் அது மகாத்மா காந்தியை குறிப்பிடுகிறதா? அல்லது சொக்கலிங்கம் நடத்திவரும் பத்திரிகையை குறிப்பிடுகிறதா என்ற மயக்கம்கூட தமிழ்நாட்டில் காணப்பட்டது என்ற பதிவுகள் உள்ளன.

வ.உ.சி

வ.உ.சி சிதம்பரனார் பத்திரிகை நடத்தவில்லை என்றபோதிலும் அவ்வப்போது பத்திரிகைகளில் அழுத்தம் திருத்தமான கருத்துகளை எழுதியுள்ளார். ‘சுயராஜ்யம்’ என்ற இதழை வெளியிட வ.உ.சி. ஏற்பாடு செய்தார். பாரதத்தில்  உள்ள சுதேசி மொழிகள் அனைத்திலும் தேசபக்த உணர்வை தூண்டும் வகையில் பத்திரிகையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பது அவரது விருப்பம். இதற்காக அவர் முயற்சியும் மேற்கொண்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக இதழ் வெளிவருவதற்கு முன் சதிவழக்கில் அவர் கைது செய்யப்பட்டுவிட்டார்.kalgi-sudhesa-mithran

மூதறிஞர் ராஜாஜி பன்முகத்தன்மைக் கொண்டவர். ராமாயணத்தையும் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியதன் மூலம் அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றியுள்ள பணி பாரதத்திலேயே மதுவிலக்குக்கென ஒரு பத்திரிகையை நடத்தியவர் ராஜாஜிதான். திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்திலிருந்து ‘விமோசனம்’ என்ற பத்திரிகையை ராஜாஜி நடத்தினார். இதில் துணை ஆசிரியராக கல்கி கிருஷ்ணமூர்த்தி பணியாற்றினார்.

எஸ்.எஸ். வாசன், ‘ஆனந்த விகடன்’ வாயிலாக சுதந்திரப் போராட்ட கருத்துக்களை பரப்பினார். இது ஜனரஞ்சகமான பத்திரிகைதான் என்றபோதிலும் விடுதலை உணர்வு சார்ந்த படைப்புகளும் பளிச்சிட்டன. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாகபூமி போன்ற படைப்புகள் ஆனந்த விகடனில்தான் அரங்கேறின. மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி வாழ்க்கை வரலாற்றை ‘கஸ்தூரி திலகம்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில்தான் பரணிதரன் எழுதினார்.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய கல்கி, தனது பெயரிலேயே ‘கல்கி’ என பத்திரிகை தொடங்கினார். வரலாற்று நாவல்களின் தாக்கத்தால் கல்கியின் விற்பனை விருவிருவென ஏறியது. மகாத்மா காந்தி, ராஜாஜி போன்றோரின் எண்ணங்களை இதழ்தோறும் கல்கி வெளியிட்டது. மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டபோது எழுத்தாளர் சாவி, நேரடியாக நவகாளிக்கே சென்று மகாத்மா காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றதுடன்  நவகாளி யாத்திரை என்ற பெயரிலேயே கல்கியில் எழுத்தோவியம் தீட்டினார்.

ம.பொ.சி

ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தில் ஈடு இணையற்ற புலமை உடையவர். அச்சுக்கோப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கிய ம.பொ.சி. சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக பங்கு கொண்டவர். ‘கிராமிணி குலம்’, ‘தமிழ் முரசு’ போன்ற இதழ்களில் ம.பொ.சி. சுதந்திரப் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியையும் வீரபாண்டிய கட்டபொம்மனையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ம.பொ.சியே.old-paper

சுதந்திரத்திற்கு முன் சென்னையிலிருந்து வெளிவந்த ‘பித்தன்’ என்ற இதழில், அப்போது மாநில கல்லூரி மாணவராக இருந்த சி. சுப்பிரமணியம் தொடர்ந்து எழுதியுள்ளார்.

தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் சகோதரர் தெ.போ. கிருட்டிணசாமி பாவலர் ‘தேசபந்து’ என்ற வார இதழை நடத்தினார். மகாத்மா காந்தி நூல் நூற்றுக் கொண்டிருப்பது போன்ற படத்தை இவ்விதழ் இலச்சினையாகக் கொண்டிருந்தது.

இன்னும் ஏராளமானோர் உரிய வெளிச்சத்துக்கு வராமலேயே சுதந்திரப் போராட்டத்துக்கு நீர் பாய்ச்சியுள்ளனர். உரம் இட்டுள்ளனர். கோபுரங்களுக்கு மட்டுமல்லாமல் அஸ்திவாரங்களுக்கும் மரியாதை செய்வதே ஏற்புடையது என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.  டூ

அன்றைய தேசபக்த

‘த ஹிந்து’. இன்று?

விதேசி மொழியான ஆங்கிலத்தைக் கூட சுதந்திரப் போராட்டத்தின் போது தேசத் தலைவர்கள் சாணக்கியத்தனமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆங்கிலத்தைக் கொண்டே ஆங்கிலேயர்களை விரட்டியடித்தனர் என்பது வரலாற்றின் சிறப்பம்சம். ‘ஹிந்து’ ஆங்கில தொடங்கிய சுப்பிரமணிய ஐயர், தேசபக்தியை வளர்க்கும் கட்டுரைகளை வெளியிட்டார். வேறு சில ஆங்கில இதழ்களும் கூட சுதந்திரப் பயிருக்கு நீர் வார்த்தன.