சீனர்களால் ஏமாற்றப்படும் அப்பாவி பாரதியர்கள்!
சீனாவைச் சேர்ந்த கிரிமினல் கும்பல்கள் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியான்மர் போன்ற நாடுகளை தங்களின் மோசடியின் மையமாக மாற்றியிருக்கிறது. இந்த, நாடுகளிலிருந்து சட்ட விரோத ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பெருமளவு பாரதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசடியில் ஈடுபடுவது பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளாக இருக்கின்றன. கடந்த 2024-மே மாத இறுதியில் கம்போடியாவின் சிஹானூக் நகரில் சந்தேகத்திற்குறிய மோசடி வளாகத்தில் பணிபுரியும் 300 மேற்பட்ட பாரதியர்கள் தங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்தின் வாயிலாக சைபர் மோசடி குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதனிடையே, சாய் பிரசாத் மற்றும் புனேவைச் சேர்ந்த முகமது உசேன் கைது செய்யப்பட்டனர். இவர்கள், கொடுத்த தகவலின்படி ஆந்திராவைச் சேர்ந்த ஆலம் என்பவனும் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சுமார் 5,000க்கும் மேற்பட்டவர்களை இந்த கும்பல் மோசடி செய்தது தெரிந்தது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சீனர்களால் கம்போடியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட இந்தியப் பெண்கள் சுமார் 3,000 பேர். இவர்கள், அனைவரும் ஹேக்கர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என தெலுங்கானாவைச் சேர்ந்த முன்ஷி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கடத்தி செல்லப்பட்ட பெண்கள் பெயரில் போலி ஐ.டி. உருவாக்கி இளைஞர்களிடம் பணம் பறிப்பது, நவீன டெக்னாலஜி மூலம் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பெரும் பணக்காரர்களை மிரட்டுவதுதான் சீனர்களின் முக்கிய பணியே. சீனர்களின் இந்த இழிவான செயலுக்கு கம்போடியா அரசும் மறைமுகமாக ஆதரவு கொடுப்பதாக தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.
2024-ம் வருட முதல் நான்கு மாதங்களில் பங்குச்சந்தை மோசடி, முதலீட்டு மோசடி, டேட்டிங் மோசடி போன்ற குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் 89,054.