சிவஸ்ருஷ்டி

‘ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்’ சத்ரபதி சிவாஜி மகாராஜவின் 393வது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட  ‘சிவ்ஸ்ருஷ்டி’ என்ற பிரம்மாண்டமான வரலாற்று தீம் பூங்காவின் முதல் கட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிப்ரவரி 19, ஞாயிற்றுக்கிழமை புனே நகரில் உள்ள நர்ஹே அம்பேகானில் திறந்து வைக்கிறார். இதன் திறப்பு விழாவிற்குப் பிறகு, ஆசியாவின் மிகப்பெரிய வரலாற்று தீம் பூங்காவாக ‘ஷ்வ்ஸ்ருஷ்டி’ அமையும். கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி காலமான பத்ம விபூஷன் பாபாசாகேப் புரந்தரே என்பவரால் சிவஸ்ருஷ்டி உருவானது. 2018ம் ஆண்டில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் நினைவிடமான சிவஸ்ருஷ்டிக்கு அப்போதைய மாநில அரசு ‘மெகா ப்ராஜெக்ட்’ அந்தஸ்தை வழங்கியது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் புகழ்பெற்ற வாழ்க்கையை நாம் கண்டுகளிக்கவும் அனுபவிக்கவும் இந்த வரலாற்று தீம் பார்க் உதவும். இவ்விழாவில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் உதயன்ராஜே போசலே, புனே கார்டியன் அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். சதாராவின் மறைந்த சத்ரபதி ராஜமாதா சுமித்ரராஜே போசலே மற்றும் மறைந்த சத்ரபதி மகாராஜ் ஸ்ரீமந்த் பிரதாப்சிங் ராஜே போசலே ஆகியோரால் 1967ல் உருவாக்கப்பட்ட சிவசத்ரபதி பிரதிஷ்டானின் அறங்காவலர் ஜகதீஷ் கதம் இதனை தெரிவித்தார்.