சில்மிஷ பாதிரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமாக மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு ஆங்கில துறை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர், சிறப்பு வகுப்பு முடித்து கல்லூரியின் அருகே உள்ள உணவகத்திற்கு சென்றனர். அங்கு குமரி மாவட்டம் மேக்காமண்டபத்தை சேர்ந்த ஸ்பெர்ஜன் சாமுவேல் என்ற கிறிஸ்தவ பாதிரி, மதுபோதையில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டும், அவர்களின் அலைபேசி எண்ணை கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். ஒரு மாணவி கை கழுவும் இடம் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, மாணவி முன்னிலையில் கைகளை ஈரமாக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஹோட்டலில் இருந்த சக மாணவர்களிடம் இதனை தெரிவித்தார். மாணவர்களுக்கும் மதபோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்களிடம் இருந்து தப்பித்த பாதிரி, தனது காரில் சென்றார். அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரி மாணவர்கள் சென்று சுங்காங்கடை பகுதியில் மதபோதகரின் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அங்கு கூடியவர்கள் சில்மிஷ பாதிரியின் வாகன கண்ணாடியை அடித்து உடைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பாதிரியை பாதுகாத்து பத்திரமாக வழியனுப்பி வைத்ததுடன் மாணவர்களை கண்டித்து தங்கள் கடமையை செம்மையாக நிறைவேற்றினர்! இந்நிலையில் பாதிரி மீது மாணவி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பாதிரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.