சாதித்த பாரத ராணுவம்

பெரும்பான்மையான மெய்தி சமூகத்தை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஒரு சில மாவட்டங்களில் சமூகங்களுக்கு இடையேயான மோதல்கள் நிகழ்ந்தன. இதனால் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) பொருந்தாததால், இம்பால் நகரின் நகராட்சி எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தன இந்த படைகள். இம்பாலிலும், சுராசந்த்பூர் மாவட்டத்தின் கிராமங்களிலும், அசாம் ரைஃபிள்ஸ் அல்லது ராணுவத்துக்கு என்று எந்தவொரு நிறுவன இயக்கத் தளமோ அல்லது முகாமோ கிடையாது. இந்த சூழலிலும், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான உதவிக்கான அழைப்புகள் வந்ததால் உடனடியாக செயல்பட்ட ராணுவம், முதல் இரவே 2,300 பொதுமக்களை ராணுவம் வெளியேற்றியது. சமூகங்களுக்கிடையில் எந்த வேறுபாடும் இல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் மோரே, லீமாகோங் மற்றும் வெங் ஆகிய இடங்களில் உள்ள ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்சின் முகாம்களுக்குன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இத்தகைய உடனடி நடவடிக்கையால், மணிப்பூரில் மிகப் பெரிய அளவில் நிகழவிருந்த வன்முறை தவிர்க்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. முக்கியமாக, இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகிய நமது ஆயுதப்படைகளின் முயற்சியால், ஒருவருக்கொருவர் வன்முறையில் ஈடுபட்ட குக்கி மற்றும் மெய்தி ஆகிய இரு சமூகங்களையும் ஒன்றிணைக்க முடிந்தது. இது, இந்த முழு மீட்பு நடவடிக்கையின் பாராட்டத்தக்க மிக முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.