உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் உற்பத்தியாகும் முஸ்லிம் பயங்கரவாதம், உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக முஸ்லிம் பயங்கரவாத தன்மை, பயங்கரவாத தாக்குதல்கள் முஸ்லிம் நாடுகளில் நடப்பதும் இஸ்லாத்திற்கு எதிராக இருக்கும் நாடுகள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்துவதும் மாமூலாக நடந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை ஐ.எஸ்.ஐ.எஸ். – அல்-கயிதா – தலிபான் – ஹிஸ்புல்லா – அல்-ஷாகிப் (Al-Shabaab ) – லஷ்கர்-இ-தொய்பா – தாரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (Tehrik-e-Taliban Pakistan) – பொக்கோ ஹாரம் என்று குறிப்பிட்டுள்ளது. சன்னி பிரிவு முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் பயங்கரவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு முன்னோடி அல்-காய்தா. அல் காய்தா என்பது ஒரு பிராந்திய ராணுவமல்ல. இது ஒரு சர்வதேச ராணுவமாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் நாம் பரவியாக வேண்டும். ஒவ்வொரு தேசத்திலும் நமக்கொரு தளம் அமைக்கப்பட வேண்டும் என தெளிவாக வரையறை செய்து அல்காய்தா துவக்கப்பட்டது.
பல நாடுகளில் அமைக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் அல்காய்தாவின் பெயரால் செயல்பட்டு பின்னர் வேறு பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. அல் காய்தாவின் கொள்கைதான் தாலிபன்களின் கொள்கையும். ஷரியத் அடிப்படையில் அரசியல் சாஸனம் இருக்கவேண்டும் என்பது தாலிபான்களின் முதன்மையான நோக்கம்.
அல் காய்தாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பயங்கரவாத அமைப்பு ஹிஸ்புல். ஒவ்வொரு திட்டத்தின் பின்னாலும் இருக்கும் அதிபயங்கரம், பிரம்மாண்டம் போன்றவைதான் அல்காய்தாவை தீவிரவாத இயக்கங்களின் தலையாய இயக்கமாக வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. ஆனால் ஹிஸ்புல் கை வைத்த எந்த திட்டமும் அதாவது பயங்கரவாத தாக்குதலும் தோல்வியை தழுவியது கிடையாது. அடிப்படையில் ஹிஸ்புல் ஒரு ஷியா பிரிவு இயக்கமாக இருந்தாலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இதன் கிளைகளில் பரவலாக சன்னி பிரிவு முஸ்லிம்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இரண்டுக்கும் அடிப்படையான கொள்கை ஒன்றே. ஆனால் ஒரு வித்தியாசமும் உண்டு. அதாவது அல்காய்தாவின் அடிப்படை நோக்கம், இஸ்லாத்துக்கு எதிரிகளாக கருதும் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் இன்னும் சில ஐரோப்பிய, ஆசிய நாடுகள், அமெரிக்க கூட்டணி நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும். அந்த நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்த வேண்டும். ஹிஸ்புல்லுக்கு இந்த கருத்தில் எந்த மாறுபாடும் கிடையாது. ஆனால் பயங்கரவாத தாக்குதல் மூலம் எதிரிகளை ஒழித்துவிட்டு, அரசியலை முழுமையாக இஸ்லாம் மயமாக்க வேண்டும் என்பதுதான் இரண்டு அமைப்புகளுக்கும் உள்ள வித்தியாசம்.
2006ல் இஸ்ரேல் – லெபனான் யுத்தம் ஒரு மாத காலம் நீடித்தபோது, இஸ்ரேலை முடிக்க வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட ஹிஸ்புல்லுக்கு உதவி செய்த அமைப்பு அல்காய்தா. கடத்துவார்கள், கொல்வார்கள், துல்லியமாகத் திட்டமிட்டு குண்டு வீசுவார்கள், நொடிப்பொழுதில் தற்கொலை படையாக மாறி வெடித்து சிதறுவார்கள். இந்த பயிற்சி முழுவதும் அல் காய்தாவிடமிருந்து கற்றுக் கொண்டது.
ஹிஸ்புல் நடத்திய தாக்குதல்கள், 1983 அக்டோபர் 23 அன்று பெய்ரூத்தில் அமெரிக்கக் கடற்படை முகாம் மீது ஹிஸ்புல்லின் தற்கொலைப் படை தாக்குதலில் 241 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 1988 பிப்ரவரி 17 அன்று அமெரிக்கக் கடற்படை அதிகாரி கர்னல் வில்லியம் ஹிக்கின்ஸைக் கடத்தி கொலை செய்தார்கள். தென்கிழக்கு ஆசியாவின் அல் காய்தா என்று வர்ணிக்கப்படும் பயங்கரவாத அமைப்பு ஜமா இஸ்லாமியா. உலகில் உள்ள எல்லா இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும் ஏதேனும் ஒருவகையில் ஆப்கானிஸ்தானுடன் தொடர்பு வைத்திருக்கிறது. அவ்வாறு ஆப்கான் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தோனேஷியாவை சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது ஜமா இஸ்லாமியா.
கிழக்கு ஆசியாவில் ஒசாமா பின்லேடனுக்கு நம்பிக்கைக்குரிய ஒரு அமைப்பு ஜமா இஸ்லாமியா என்பது பலருக்கு தெரியாத ரகசியம். அல்காய்தா உருவாவதற்கு முன்பே இந்த தொடர்பு ஏற்பட்டது. இதன் காரணமாக புதிய பயங்கரவாத அமைப்பை துவங்க பயிற்சி அளிப்பது, நிதி உதவி செய்வது, தாக்குதல் நடத்த திட்டமிட்டுவது, தாக்குதலுக்கு தேவையான ஆயுதங்கள் வெடி பொருள்கள் வழங்குவது உட்பட்ட அனைத்து உதவிகளை செய்து கொடுத்தது அல் காய்தா அமைப்பு. பாலி குண்டுவெடிப்புச் சம்பவத்தின் வெற்றியைப் பாராட்டி ஒசாமா பின்லேடன் ஒரு லட்சம் டாலர் அன்பளிப்பாக ஜமா இஸ்லாமியாவிற்கு அளித்ததாக ஒரு பேட்டியில் ஜமா இஸ்லாமியின் ஹம்பாலி தெரிவித்தார்.
ஐ.நாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு போகோ ஹராம். வடக்கு நைஜீரியாவில் செயல்பட்டு வருவது. இவர்களின் நோக்கமும் அல்காயிதா, தலிபான், ஹிஸ்புல்லா, ஜமா இஸ்லாமியா, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை போலவே, கலிஃபாவின் ஆட்சியைக் கொண்டு வருவது, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது, இஸ்லாமிய கல்வியை மட்டும் போதிப்பது, ஷரியத் சட்டத்தின் ஆட்சியை கொண்டு வருவது, இஸ்லாத்தின் எதிரிகளை கொன்று குவிப்பது என்பதுதான்.
2002ம் ஆண்டு போகோ ஹராமை வலுப்படுத்த அல்காய்தாவின் பின்லேடன் தனது உதவியாளர்கள் இருவர் மூலமாக 3 மில்லியன் டாலர் நன்கொடையாக கொடுத்தார். 2006ல் போகோ ஹராம் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் அல்காய்தாவினர். மாலி தீவில் உள்ள அல்காய்தா மெகரப் என்ற அமைப்பின் கீழ் பயிற்சி அளித்தது. இந்த பயிற்சி 2013 வரையிலும் கொடுக்கப்பட்டது.
அல்காய்தாவினர் ஒவ்வொரு நாட்டிலும் அல்காய்தாவின் அமைப்பை ஏற்படுத்தவும், பின்னர் அந்த அமைப்பினருக்கு தனியாக ஒரு புதிய அமைப்பை உருவாக்க துணை நிற்பதும் வாடிக்கை. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். உருவாக்க வழி வகுத்துக் கொடுத்து அல்காய்தா 2004 அக்டோபரில் ஒசாமா பின்லோடனின் விசுவாசியான ஜர்க்காவி என்பவன் தலைமையில் அல்காயிதா ஈராக் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. துவக்க காலங்களில் ஈராக்கில் உள்ள ஷியா பிரிவினருக்கு எதிராக தாக்குதல், கொலை, கொள்ளைகளை நடத்தினாலும், பின்னாளில் இஸ்லாமிய நாட்டை உருவாக்க ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற ஓரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகவே அல்காய்தா ஈராக் என்ற பயங்கரவாத அமைப்பே பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆனது.
இவ்வாறு உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அல் காய்தா தனது மூக்கை நுழைத்து, அந்த நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத அமைப்பிற்கு இழுத்து விடுகிறது. இதன் காரணமாகவே பாரதத்திலும் கடந்த பல ஆண்டுகளாக அல் காய்தாவினர் தங்களின் அமைப்பிற்கு ஆள் பிடித்து வருகிறார்கள். டூ
பாரதத்தில் பச்சை படர்கிறதா?
தேசியப் புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) மதுரையில் கடந்த ஞாயிறு அல்காய்தா தொடர்பு கொண்டவர்கள் என நான்கு பயங்கரவாதிகளை கைது செய்தது. மேலும் சென்னையில் சம்சுதீன் என்பவனையும் கைது செய்து விசாரணை நடத்தியபோது, பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கைது செய்யப்பட்டவர்கள் மைசூர், சித்தூர், நெல்லூர், கொல்லம், மலப்புரம் போன்ற இடங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை நடத்தியவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே அல் காய்தா பாரத தேசத்திலும் ஆள் சேர்க்க முயன்றது என்பதை உளவுத் துறையினர் தெரிவித்தார்கள்.
பல்லிளிக்கும் சகோதரத்துவம்
கி.பி.632ல் முகமது நபி யார் தலைமையில் இஸ்லாம் இருக்க வேண்டும் என்கின்ற பதவி சண்டையில் சன்னி என்றும் ஷியா என்றும் இரண்டு பிரிவுகள் பிரிந்தன. உலகில் 85 முதல் 90 சதவீதம் சன்னி பிரிவு முஸ்லிம்களும் மீதமுள்ள இஸ்லாமியர்கள் ஷியா. பெருவாரியான முஸ்லிம் நாடுகள் சன்னி பிரிவைச் சார்ந்தவை. சன்னி பிரிவு முஸ்லிம்கள் உலகம் முழுவதும் கலிஃபாவின் ஆட்சியை நிலை நிறுத்தவும் ஷரியத் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவும், இஸ்லாமிற்கு எதிரானவர்களை கொன்று குவிக்க, இஸ்லாமியர்களாக மத மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே அடிப்படைக் கொள்கை.