பில்கேட்ஸ் உருவாக்கிய ‘மைக்ரோசாப்ட் விண்டோஸ்’ அவரை உலக பெரும் பணக்காரர் ஆக்கியது. இனி இது மட்டுமே உலகாளும் என சொல்லப்பட்டது. யாஹு தேடுதளமும் அப்படிதான்.
ஆனால் கூகுள் தேடுதளம் மெல்ல வளர்ந்தது. முதலில் யாஹூவை ஓரம்கட்டியது. ஸ்மார்ட் போன்களுக்கான ஆண்டிராய்டு இயங்குதளத்தை அறிமுகப்படுத்தி விண்டோசை முந்தியது.
தற்போது 95% ஸ்மார்ட் போன்களிள் ஆண்டிராய்ட்தான் பயன்படுகிறது. அனைத்தையும் வசப்படுத்தி, தான் மட்டுமே உலகாள வேண்டும் என்ற சர்வாதிகார போக்கு இன்று கூகுளில் தலை தூக்கியுள்ளது.
தனிமனித சுதந்திரத்திரத்தில் கூட மூக்கை நுழைத்து, அதனை காசாக்குகிறது கூகுள். அதன் ஆதிக்க செயல்பாடுகள் காரணமாக அனைத்து நாடுகளின் அரசுகள், இணைய நிறுவனங்கள், மக்கள் என அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.
இதற்கு சரியான மாற்று கிடைக்காதா என மக்களும் சிந்திக்கின்றனர். கூகுளின் இந்த ஆதிக்க மனோபாவமே அவர்களின் சாம்ராஜ்ஜியத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் பே-டிஎம் செயலியை நீக்கி, பின் மீண்டும் சேர்த்தது. பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் பிளே பில்லிங்கில் இணைந்து, 30% கமிஷன் தரவேண்டும் என உத்தரவிட்டது. பே-டி-எம் இதற்கு மாற்றாக மினி ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியது. தன்னை கேட்க யாரும் இல்லை எனும் மமதையில் இருந்த கூகுளுக்கு இது எதிர்பாராத முதல் அடி.
இதனால் பயந்து, பிளே பில்லிங்கில் இணையும் கெடுவை மார்ச் 2022 வரை ஒத்தி வைத்துள்ளது கூகுள்.
சர்வாதிகாரம் என்றும் நீடித்து நிற்காது என்பதற்கு ஸ்டாலின், முசோலினி, ஹிட்லர் என பல உதாரணங்கள் உண்டு. இதை கூகுள் புரிந்துகொள்வது நல்லது.