சமூகம் ஒன்றுபட வேண்டும்

சர்வதேச மனித சகோதரத்துவ நாளை முன்னிட்டு ஐ.நா சபையில் நடந்த கூட்டத்தில், பாரதத்திற்கான தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இணைய வழியில் கலந்துகொண்டு பேசினார்.அதில் அவர், ‘சமீப காலமாக மதங்களுக்கு எதிராக புதிய அச்சம் தலைதூக்கியுள்ளது.குறிப்பாக ஹிந்து, பௌத்தம், சீக்கிய, பார்சி மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.இதனை ஐ.நா கவனத்தில் கொள்ள வேண்டும்,ஐ.நா உறுப்பு நாடுகள் தீர்வு காண வேண்டும்.அப்போது தான், மத வெறுப்புணர்வு, வன்முறைகளுக்கு எதிரான விவாதங்கள் பயனுள்ளதாக அமையும்.இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்று பேசினார்.