குஜராத்தில் கலவர வழக்கில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் அகமது படேலின் உத்தரவின் பேரில் நரேந்திர மோடிக்கு எதிரான அரசியல் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக அகமது படேலிடம் இருந்து தீஸ்தா செதல்வாட், ரூ. 30 லட்சம் பெற்றார் என அகமதாபாத் அமர்வு நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பா.ஜ.க தலைவர் சம்பித் பத்ரா, ‘இந்தச் சதிகளுக்கு யார் காரணம் என்று பிரமாணப் பத்திரம் உண்மையைக் கொண்டு வந்துள்ளது. ஆனால், அகமது படேல் என்பது வெறும் பெயர், அவருக்கு உந்து சக்தியாக இருந்தவர் சோனியா காந்தி. சோனியா காந்தி தனது தலைமை அரசியல் ஆலோசகர் அகமது படேல் மூலம் குஜராத்தின் இமேஜை கெடுக்க முயன்றார். அகமது படேல் மூலம், அவர் நரேந்திர மோடியை அவமதிக்க முயன்றார். அவர்தான் இந்த முழு சதித்திட்டத்தின் சிற்பி’ என தெரிவித்துள்ளார்.