உத்தராகண்ட் அரசு சட்டவிரோத மதர்சாக்கள் மற்றும் மசார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம், உத்தராகண்ட் அரசு, ரிசர்வ் வன நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட மஜார்களை புல்டோசர்களை கொண்டு இடித்துத் தள்ளியது. அரசு, அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அரசு நிலங்களை இவ்விதமாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமார் 1,400 மதக் கட்டிடங்களை அடையாளம் கண்டுள்ளனர். சமீபத்தில், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பழமையான மற்றும் மிகவும் பிரபலமான வனவிலங்குகளில் ஒன்றான ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சரணாலயங்கள், அணைகள் உட்பட மாநிலம் முழுவதும் பல இடங்களில் காளான்களை போல வளர்ந்து வரும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மஜர்கள் மீதான தனது அரசின் கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில், சமீபத்தில் உள்ளூர்வாசிகள் புகாரையடுத்து, உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சஹாஸ்பூரில் உள்ள மதரசா ஜாமி உலூமில் உள்ள மதரசா வளாகத்தில் ஆய்வு செய்த முசோரி டெஹ்ராடூன் மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், அங்கு சட்டவிரோதமாக மசூதி, பெரிய தண்ணீர் தொட்டி உள்ளிட்ட கட்டுமானங்கள் அரசின் எவ்வித அனுமதியும் இன்றி முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக் கட்டப்பட்டு வருவதையும் அரசின் வழிகாட்டுதல்களை மீறி அவை கட்டப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர். இதையடுத்து அதன் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தாலுகா நிர்வாகம் இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. நில அளவீடுகள் மற்றும் பிற ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து முன்னதாக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு அதன் உரிமையாளர்களிடமிருந்து எந்த பதிலும் வராததையடுத்து அதிகாரிகள் மீண்டும் ஒரு புதிய நோட்டீசை வெளியிட்டுள்ளனர். நிர்வாகம், அதற்கு பதிலளிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.