சமீபத்தில் நடந்து முடிந்த கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. 186 கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 150 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ‘கட்சி சின்னத்தில் தேர்தல் நடக்கவில்லை என்றாலும், பெரும்பாலான பஞ்சாயத்துகளில் பா.ஜ.க தொண்டர்கள் வெற்றி பெற்றதை முடிவுகள் காட்டுகின்றன. சில கிராமங்களில் காங்கிரஸ் அதிர்ச்சிகரமான பின்னடைவை சந்தித்துள்ளது’ என்று மாநில பா.ஜ.க தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே கூறினார். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ‘கோவாவில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று. இந்த வெற்றி பா.ஜ.கவின் திட்டங்களை மாநிலத்தில் அடிமட்ட அளவில் கொண்டு சென்று செயல்படுத்த உதவும்’ என கூறினார்.