கைகளை இழந்த மாற்றுத் திறனாளி பாதத்தை பயன்படுத்தி வாக்களித்தார்!

குஜராத் கேடா தொகுதியின் நடியாட் வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி பாதத்தினால் வாக்களித்தார்.
இரண்டு கைகளும் இல்லாத அன்கித் சோனி எனும் இளைஞர் நடியாட் வாக்குச்சாவடி அறைக்குள் நேற்று முன்தினம் வருகை தந்தார். சட்டை, பேண்ட் அணிந்திருந்த அவர் அறையில் அமர்ந்திருந்த அதிகாரி முன்னால் இருந்த மேஜையில் தனது வலது பாதத்தைத் தூக்கி வைத்தார்.
அவரது கால் கட்டைவிரலில் தேர்தல் மை பூசப்பட்டது. பிறகு அன்கித் சோனி சாவடிக்குள் நுழைந்தார். அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பாதம் கொண்டு வாக்களித்தார்.