கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள்

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், லக்னோவில் ‘கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுக்களின் அதிகாரப்பூர்வ இலச்சினை, ஜோதி, கீதம் மற்றும் ஜெர்சியை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அனுராக் சிங் தாக்கூர் பேசுகையில், “நமது பிரதமர் நரேந்திர மோடி கற்பனை செய்த ‘கேலோ இந்தியா இயக்கம்’ இன்று ஒரு புரட்சியாக பாரதத்தின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை அடைந்துள்ளது. இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் பல்கலைக் கழக விளையாட்டு வீரர்கள், வாழ்க்கையின் கடினமான பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு விளையாட்டு ஒரு சிறந்த பாதை என்பதை அறிவார்கள்’’ என்று கூறினார். கூட்டத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், “இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுச்சூழலும் கருத்தும் அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சியுடன் ஒரு பெரிய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது, அதனால்தான் விளையாட்டும், விளையாட்டு வீரர்களும் இங்கு செழித்து வருகிறார்கள். பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் வரவேற்கிறேன்” என்று கூறினார்.