உலகப் புகழ்பெற்ற சார் தாம் கோயில்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலில் கருவறையின் மீது தற்போது 230 கிலோ எடையில் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு தங்கத் தகடுகள் பொருத்திக் கொடுக்க மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் முன்வந்துள்ளார். அவர் தனது பெயரை பொதுவில் தெரிவிக்க விரும்பவில்லை. கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க தகடுகள் பொருத்த அவர் அரசிடம் அனுமதி கோரினார். இதற்கு கடந்த மாதம் ஒப்புதல் கிடைத்தது. அவர் தனது பெயரை பொதுவில் தெரிவிக்க விரும்பவில்லை. தங்க தகடுகள் பொருத்துவதற்காக, வெள்ளித் தகடுகளை அகற்றும் பணியை கோயில் நிர்வாகம் தொடங்கிவிட்டது. கருவறையின் சுவர்கள், மேற்கூரைகள் மற்றும் தூண்களில் தங்க தகடுகள் பொருத்தப்படவுள்ளன. தங்கத்தகடு பொருத்தும் பணி முடிவடைந்த பிறகு கருவறைக்குள்ளும், தூண்களிலும் தாமிர தகடுகள் பொருத்தப்படவுள்ளது. அளவெடுக்கும் பணி முடிவடைந்ததும், தங்க தகடுகள் செய்யப்பட்டு பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.