குழந்தையை மீட்ட ஹிந்து அமைப்பினர்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்கள் முட்மா கண்காட்சியை பார்க்க ஒரு சிறுபான்மையின குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பழங்குடியின தம்பதியிடம் இருந்த கைக்குழந்தையை, அந்த சிறுபான்மையின குடும்பத்தினர் ரூ. 20.000 ஒப்பந்தம் போட்டு வாங்கியுள்ளார். கண்காட்சி முடிவடைந்த பிறகே கிராம மக்களுக்கு குழந்தை விற்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள், பஜ்ரங் தள் என்ற அமைப்பினருக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். இதனை விசாரித்த பஜ்ரங் தள் அமைப்பினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் குழந்தையை விற்கசொல்லி அதன் தந்தையிடம் கேட்டபோது குழந்தையின் தந்தை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் பின்னர் அவரை மது அருந்தவைத்து அவரது விரல் ரேகையை ஒப்பந்தத்தில் பதிய வைத்ததும் தெரிய வந்துள்ளது.