கிறிஸ்துமஸ் புத்தாண்டு ரத்து கோரிக்கை

உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், உலக நாடுகள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவில், ஒமைக்ரானால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரஸ் அதானம், ‘ஒமைக்ரான் வைரஸ், டெல்டாவை விட வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம். எனவே, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம். வாழ்க்கையை இழப்பதை விட நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பதே சிறந்தது. தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை விட, தற்போது ஒத்திவைத்துவிட்டு பிறகு கொண்டாடலாம். கடினமான முடிவுகள் அவசியம். 2022 இறுதிக்குள் உலகில் அனைத்து நாடுகளிலும் 70 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும்போது, அடுத்தாண்டு மத்தியில் இந்த பெருந்தொற்று முடிவுக்கு வரும்’ என தெரிவித்து உள்ளார்.