வெளி நாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற எப்.சி.ஆர்.ஏ விதிமீறல் புகார்களின் அடிப்படையில், இரண்டு கிறிஸ்தவ அறக்கட்டளைகளின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த நியூ ஹோப் அறக்கட்டளை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஹோலி ஸ்பிரிட் அமைச்சகங்கள் ஆகிய இரண்டும், சர்ச்சைக்குரிய வகையில் வெளிநாட்டு நன்கொடையாளரான காஸ்பல் ஃபார் ஏசியாவிடம் இருந்து முறைகேடாக நிதி பெற்றுள்ளது. முன்னதாக நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கோஸ்பல் ஃபார் ஏசியா மற்றும் அதன் உலகளாவிய பிரிவுகளான கோஸ்பல் ஃபார் ஏசியா, வேர்ல்ட், யு.எஸ், கனடா ஆகியவர்றின் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்கள் தொடர்பாக, 20,600 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு இந்த ஆண்டு பிப்ரவரியில் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.