ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (சிஆர்பிஎஃப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்தனர். காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுப்பெற்ற பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி ஒட்டி வந்த சக்திவாய்ந்த வெடிமருந்து நிறைந்த காரானது மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பேருந்துமீது மோதச் செய்த, இந்த தாக்குதலில் 43 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 36 வீரர்கள் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவுப் பெற்ற ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2016ம் ஆண்டு உரியில் நடந்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல் இதுதான் என தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து வருகிறது. கூடிய விரைவில் எதிர் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.