பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காளி கோயிலில் ஒரு நபர், கோயிலின் சுற்றுச்சுவர் மீது ஏறி அம்மன் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை அடைந்து அங்கு அத்துமீறி நடந்துகொண்டார். இதனையடுத்து அவரை பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில், அந்த நபர் நைன்கலான் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்பீர் சிங் என அடையாளம் காணப்பட்டார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பஞ்சாப்பில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் ஹிந்து சீக்கிய ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் திட்டமிட்டே நடத்தப்படுகிறது. இந்த செயலுக்கு பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பா.ஜ.க தலைவர்கள், தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.