கழகங்களின் நரித்தனம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு   மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்பது மேலோட்டமாக பார்த்தால் ஆதரிக்க வேண்டும் என்றே தோன்றும். அதிமுகவும், சில பாஜகவினரும்கூட இதை ஆதரிக்கின்றனர். ஆனால் இது உண்மையில் மத்திய மாநில அரசுகளை சிக்கலில் சிக்க வைக்க தி.மு.கவால் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு அரசியல் விளையாட்டு.

காரணம் இதுபோன்ற ஒரு உள்ஒதுக்கீட்டு கோரிக்கையை குஜராத் நீதிமன்றம் ஏற்கனவே புறக்கணித்திருக்கிறது. எனவே இதை நிறைவேற்றுவதில் சட்டசிக்கல் உள்ளது.

சரி, தமிழகத்தில் இதை சட்டமாக்கி நிறைவேற்றலாம் என்றால், பாமகவின் 20% இட ஒதுக்கீடு போராட்டம் ஒருபுறம், மறுபுறம் 7.5% இட ஒதுக்கீட்டை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும் என்ற இவர்களின் போராட்டம்.

பிரச்சனைகளை உருவாக்கி அரசியல் லாபமடைவதே திமுகவின் வழக்கம். காவிரி, கச்சத்தீவு, ஹிந்தி எல்லாமே இந்த ரகம்தான். அதைத்தான் திமுக தற்போதும் செய்கிறது.

ஆளுநர் உள்ஒதுக்கீட்டில் கையெழுத்திட்டால், மற்ற சாதியினரை தூண்டி இட ஒதுக்கீடு குழப்பம் உண்டாக்குவார்கள். கையெழுத்திட மறுத்தால், இருக்கவே இருக்கிறது, ‘பாசிச பாஜக துணைபோகும் அதிமுக’ கோஷங்கள்.

திமுகவிற்கு அரசு பள்ளி மாணவர்களின் மீது அக்கறை எதுவும் இல்லை. அவர்களின் நோக்கம் குழப்பத்தை உருவாக்குவது. மக்களிடம் நீட் தேர்வு குறித்து எதிர்மறை கருத்துகளை ஏற்படுத்துவது.

நீட்டை நீக்கி மருத்துவ இடங்களை ஏலம் விட்டு சம்பாதிப்பதுதான். ஆளுனர் இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்தாலும் இதன் பின்னால் உள்ள இவர்களின் சூழ்ச்சிகளையும், அதனால் ஏற்படப்போகும் மற்ற பிரச்சனைகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுப்பது அவசியம்.