கலா கும்ப் முயற்சி

‘கலா கும்ப்’ எனும் தனித்துவ முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான, கண்கவரும் ஓவியச்சுருள்கள், 2022 குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக டெல்லியின் ராஜபாதையில் நிறுவப்பட்டுள்ளன. ராஜ பாதையின் இருபக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓவியச்சுருள்கள் அனைவரையும் ஈர்ப்பவையாக உள்ளன. சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை நாம் கொண்டாடும் நேரத்தில், 750 மீட்டர் நீளமுள்ள இந்த ஓவியச்சுருள்கள் கலாச்சார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தனித்துவ முன்முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளன. தேசத்தின் பெருமிதத்தையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த ஓவியச்சுருள்கள், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மாறுபட்ட கலைவடிவங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. 500க்கும் அதிகமான கலைஞர்களால் ஆர்வத்துடன் ஆய்வு செய்யப்பட்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் விடுதலைப் போராட்டத்தில் வெளியில் அதிகம் தெரியாத சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவை குடியரசு தினத்திற்குப் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும். சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்படும்.