இந்த வாரம் இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பில் குஜராத்திலும் ஹிமாச்சல பிரதேசத்திலும் சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றிபெறும் என கண்டறிந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதுதானே என நீங்கள் கேட்டாலும் எதிர்த்து எழுதுவது தானே எங்கள் பண்பு என மீடியா மொத்தமும் சொல்கிறது.
குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாஜக ஆட்சி. அதில் மோடியே 14 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருக்கிறார். எதற்கெடுத்தாலும் ‘குஜராத் மாடல்’ என்பது உவமைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.
குஜராத்தில் தேர்தல் மாதம் என்பதால், மோடியும் அமித் ஷாவும் மாறி மாறி குஜராத் விஜயம் செய்கின்றனர் என ஊடகங்களில் தலைப்புச் செய்திகள். படேல் சமூக இளைஞர் தலைவர் ஹார்திக் படேல், ராகுலுடன் சந்திப்பு, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத்யாதவ் காங்கிரஸுக்கு ஆதரவு. உத்தரப் பிரதேசத்தில் எலியும் பூனையுமாக உள்ள சமாஜ்வாதி – காங்கிரஸ் குஜராத்தில் ராகுலுக்கு ஆதரவு, இன்னும் ஏன் ஆம் ஆத்மி முதல் நண்டு, சிண்டு நார்த்தங்காய் என சீமான் கட்சி போன்ற சிறிய கட்சிகளும் காங்கிரசிற்கு ஆதரவு தெரிவித்து குஜராத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியதும் பாஜகவிற்கு இது ஒரு அக்னிப் பரீட்சை, குஜராத்தில் சறுக்கினால் அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலம், அதோடு தொடர்புடைய கர்நாடகா அதன்பின் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு இவைகள் முன்னோட்டம். எனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஏற்படுத்தும் தோல்வி அடுத்து எதிர்வரும் தேர்தல்கள் பாஜகவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணக்குப் போடுகிறது காங்கிரஸ். இந்தியா டுடே குழும கருத்துக் கணிப்பாளர்கள் குஜராத் மக்களின் பேச்சில் பாஜக தவிர வேறு வரவில்லை என்கின்றனர்.
இங்கு பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மோடியும் பாஜகவும் எங்களை மிக உயரத்தில் ஏற்றி வைத்துள்ளனர். நாங்கள் இதற்கு துரோகம் செய்ய மாட்டோம். காங்கிரசிடம் விலை போகமாட்டோம் என அவர்கள் கூறியது, மோடியின் ஆளுமைக்கும் சாதனைக்கும் கிடைத்த வெற்றி. குஜராத்தில், ஏற்கனவே தன் நண்பர்கள், வாக்காளர்கள், கட்சிக்காரர்களோடு மோடி நேரடியாக டெலிபோனில் பேச ஆரம்பித்து விட்டார். துவக்கமே நச்சென்று இருப்பதால், வெற்றி கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. ஆம். டிசம்பர் 18ந் தேதி நம் காதில் விழப்போவது குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலின் வெற்றிச் செய்திதான்.
இடதுகள் தேசபக்தி எந்த தேசத்திற்கோ?
** தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டுமா? கட்டாயப்படுத்த முடியாது! எழுந்து நிற்பதுதான் தேசபக்தியா? என்பது போன்ற விமர்சனத்தை வெளியிட்டவர் தமிழக முதலமைச்சராகும் கனவில் உள்ள கமல்ஹாசன்!
** இதில் பாதி கருத்தை வெளியிட்டிருக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி! பத்துநாள்கூட ஓடத் தகுதியற்ற மெர்சல்” என்கிற நடிகர் ஜோசப் விஜய்யின் திரைப்படம் (அவர் முழுப்பெயர் அதுதானாம்! ஆனால் அப்படி சொன்னால் அவரும் அவர் அப்பாவும் கோபித்துக் கொள்கிறார்கள்) ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஹிந்து கோயில்கள் பற்றி வசனங்களை வேண்டுமென்றே உள்ளே புகுத்தி, பாஜகவையும், மெஜாரிட்டி மக்களையும் சீண்டியிருக்கிறது!
இந்த இரு சம்பவங்களிலும், கமல்ஹாசன், அரவிந்த சாமியின் தேசியகீத அவமதிப்பு நிலைப்பாட்டுக்கு ‘ஊடக விவாதம்’ என்ற பெயரில், பாஜக தவிர அனைத்துக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியமில்லை!
** சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு எடுத்த திரைப்படம் ‘விஸ்வரூபம்’ முஸ்லிம்களின் ஏகோபித்த கோபத்துக்கு ஆளாகி, கட்டப்பஞ்சாயத்து செய்யப்பட்டு, அரசு சென்சார்போர்டுக்குப்பின், இரண்டாம் முறையாக மசூதியில் சென்சார் செய்யப்பட்டபோது காது அடைத்து, வாய்பொத்தி மௌனம் காத்த மாவீரர்கள் இன்று எப்படி பொங்குகிறார்கள்!
** உலகின் எந்த ஒரு நாட்டிலும், அந்நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும்போது, எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது கட்டாயம்! இதை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! கமலஹாசன் குறிப்பிட்ட சிங்கப்பூரில் செய்திருந்தால் அவர் ஜெயிலுக்குள்தான் இருந்திருப்பார்!
கமலுக்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி கட்சிகளின் தாய் பூமியான சீனாவில் தேசிய கீதம், கொடிக்கு அவமரியாதை செய்தால் 15 நாள் போலீஸ் காவல்! போலீஸ் காவல் என்றால் சீனாவில் எல்லாம் முடிந்தது எனப்பொருள்! இன்னொரு கருத்தையும் இடதுசாரிகள் கமலுக்கு ஆதரவாக வைத்தார்கள்! தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்பதுதான் தேசபக்தி என்பதல்ல” என்று! கேரளாவில், தலசேரியில், பினராயி விஜயன் படித்த அரசு கல்லூரியின் 125வது ஆண்டு விழாவில் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் பிரிவு SPI ஒரு மலர் வெளியிட்டுள்ளது. அதன் பெயர்” பெல்லட்”. அதன் 12வது பக்கத்தில் கையால் வரைந்த ஒரு ஓவியம். அது சினிமா திரையரங்கில் தேசிய கொடி பறப்பது போலவும், அமர்ந்திருக்கும் பார்வையாளர்களில் ஒரு ஆணும், பெண்ணும் சல்லாபிப்பது போன்றும் ஆபாசமாகவும் சித்தரித்து தேசியக் கொடியை அவமரியாதை செலுத்துவதாக வெளியிட்டுள்ளது! இந்தியாவில் கருத்து சுதந்திரம் கோரும் கம்யூனிஸ்டுகள், கமல்ஹாசன், ஜோசப் விஜய், அவர்களின் ‘எஜமான’ நாடுகளான, சிங்கப்பூர், சீனா எதிலும் இதை கோரினால், இருக்கவேண்டிய இடம் காராகிரகம்” என்ற சிறைதான்; அதாவது வதைமுகாம்தான். இது தெரிந்தும் ஏன் இங்கு மட்டும் குத்தாட்டம் போடுகிறார்கள்?