அன்புடையீர் வணக்கம்.
சென்னையில் எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தற்செயலாக ‘லவ்ஜிகாத்’ பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. அப்போது தனது மகன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும்போது உனது எதிர்காலம் பற்றி முடிவெடுக்க உனக்கு முழு உரிமை உள்ளது. ஒருவேளை நீ காதல் திருமணம் கூட செது கொள்ள முடிவெடுக்கலாம். அதை தவறு என்று நான் சோல்லப்போவதில்லை. ஆனால் எந்தக் காரணம் கொண்டும் வேற்று மதத்துப் பெண்ணை திருமணம் செது கொள்ள முடிவெடுக்காதே என்று தெரிவித்தேன்” என்றார்.
அவருடைய கருத்து சரியானதே என்று தெரிவித்தேன். கேரளத்தில் சமீபத்தில் நடந்த ‘லவ்ஜிகாத்’ திற்குக் காரணம் அந்தப் பெண்ணின் தந்தைதான். அவர் ஒரு கம்யூனிஸ்ட். எம்மதமும் சம்மதம் என்ற அவரின் கருத்துதானே குழந்தைகளுக்கும் மனதில் பதிவாகியிருக்கும். அதனால் வந்த ஆபத்துதான் அது. நீதிமன்றத்தில் பெற்றோர்களுடன் செல்ல விருப்பமா காதலனுடன் செல்ல விருப்பமா என்று கேள்வி வந்தபோது, தான் காதலனுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தாள். இத்தனைக்கும் அவனது கணவன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தொடர்பில் தற்போதும் இருந்த வருவதாக ‡குஅ தகவல் தெரிவிக்கிறது. அதனால் மகனோ, மகளோ அவர்களுக்கு திருமணம் பற்றிய நமது கண்ணோட்டத்தைப் புரியவைக்க வேண்டும்.
நாம் ஏதாவது ஒரு ஹிந்து அமைப்போடு தொடர்பில் இருக்கவேண்டும். நமது குழந்தைகளுக்கும் ஹிந்து மதத்தின் அருமை, பெருமைகள் பற்றி சோல்லிக் கொடுக்க வேண்டும். எங்கோ பற்றி எரியும் தீ நாளைக்கு நம்மையும் தாக்காது என்பது என்ன நிச்சயம்? அதனால் உஷார்.
வாழி நலம் சூழ.
ம. வீரபாகு, ஆசிரியர்