கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அம்மாநில தேர்தல் பணிகளை கவனிக்க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பா.ஜ.கவின் கர்நாடக மாநில பொறுப்பாளராகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை இணை பொறுப்பாளராகவும் நியமித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.