கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது கே.எஸ்.ஆர் ரயில் நிலையம்.இந்த ரயில் நிலையத்தில்தான் பிளாட்பார்ம் எண் 5ல் உள்ள போர்ட்டர்களின் ஓய்வறை, முஸ்லிம்களால் 10 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக மசூதியாக மாற்றி அமைக்கப்பட்டது.மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த அறைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.இதுகுறித்த காணொளி சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பரவியது. இதனையடுத்து பொதுச் சொத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மசூதியாக மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஹித் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.இதனையடுத்து, ரயில்வே துறை சட்டவிரோத மசூதியை மறுசீரமைத்து மீண்டும் ஓய்வறையாக மாற்றியுள்ளது.