கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதுடன் தற்போதைய புதிய மாறுபாடான ஒமிக்ரான் உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான சி.எஸ்.ஐ.ஆர் – சி.டி.ஐ.ஆர் விஞ்ஞானிகள், இணைந்து ஓமிக்ரான் மாறுபாட்டை கண்டறியும் ஆர்.டி – பி.சி.ஆர் கிட்டை உருவாக்கியுள்ளனர். இதனை ஹைதராபாத்தை சேர்ந்த பயோடெக் டெஸ்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த கருவிக்கு INDICoV-OmTM என பெயரிடப்பட்டுள்ளது. குழுத் தலைவர் டாக்டர் அதுல் கோயல், ‘ஓமிக்ரான் மாறுபாட்டை விரைவாகவும் குறைந்த செலவிலும் இக்கருவியால் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் கொரோனா தொற்றுடன் இணைந்து பிற சுவாச நோய்த் தொற்றுகளின் மாறுபாடுகளைக் கண்டறிவதற்கும் இதனை சீரமைத்துக்கொள்ளலாம். இந்த கருவி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ICMR) இறுதிகட்ட சோதனைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும்’ என தெரிவித்தார்.