ஒற்றுமைக்காகத்தான் பொது சிவில் சட்டம்; அண்ணாமலை

விழுப்புரத்தில் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொது சிவில் சட்டம் என்பது அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். யாரையும் பிரிப்பதற்காக வரக்கூடிய சட்டம் அல்ல. ஒற்றுமைக்காகத்தான் பொது சிவில் சட்டம். அம்பேத்கர் பார்லிமென்டில் அரசியல் அமைப்பு சட்டத்தை குறித்து பேசும் போது ஒரு நாட்டில் இரண்டு அல்லது மூன்று வேறு வேறு சட்டங்களை வைத்து கொண்டு ஒற்றுமையான நாட்டை உருவாக்க முடியாது என விளக்கம் அளித்திருந்தார்.

தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜ., ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை கட்ட கூடாது என்பதில் தமிழக பாஜ., உறுதியாக உள்ளது. மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜ., துணை நிற்கும். தமிழக கவர்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தினமும் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் திமுக, வால் தாங்க முடியாது. தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்கும் பதில் சொல்ல கவர்னர் அரசியல்வாதி அல்ல. கவர்னர் செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். கவர்னர் அரசியல் பேசக்கூடாது, கடமையைச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.