ஒடிசாவில் தாமரை மலரும்: அமித்ஷா

‘ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெறும். தாமரை மலரும்’ என தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் குறிப்பிட்டார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: 5 கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 310 தொகுதிகளுக்கு மேல் பிரதமர் மோடி கைப்பற்றி உள்ளார். எந்த இளைஞரும் தன் குடும்பத்தை விட்டு வேறு எந்த மாநிலத்திற்கும் கூலி வேலைக்குச் செல்லாத வகையில், ஒடிசா மாநிலம் வளர்ச்சி அடைய பா.ஜ., விரும்புகிறது.

 

நாட்டை வளமாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும். பழங்குடியின குடும்பத்தின் மகளான திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி மோடி கவுரவித்துள்ளார். ஒடிசாவில் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெறும். தாமரை மலரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.