மூத்த பத்திரிகையாளர் கல்யாண் குமார் யூ டியூப் சேனல் ஒன்றில் பேசுகையில், ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான். இப்படம் வெளிவரும் முன்பே, இந்தியா டுடேவிற்காக ரஹ்மானை முதன் முதலில் நான் பேட்டி எடுத்தேன். ஒருமுறை, சன் டி.வியின் சார்பாக அவரிடம் பேட்டி எடுத்தேன். அதில், ரஹ்மானின் சிறந்த 10 பாடல்களை சன் டி.வியில் ஒலிபரப்பு செய்ய முடிவு செய்தேன். நிகழ்ச்சியின், இறுதியாக கே.வி. மகாதேவனின் ஆன்மீக பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கும்போதே, ஏ.ஆர். ரஹ்மான் தியாகராஜ பாகதவரின் படத்தின் முன்பு வணக்கம் செலுத்துவது போன்று காட்சி ஒன்றை அமைத்திருந்தேன். அனைத்து வேலையையும் முடித்து, சன்.டி.வியிடம் அந்த டேப்பை ஒப்படைத்தேன். இரவு, ஒரு மணிக்கு, ஏ.ஆர் ரஹ்மானை அவரது அலுவலகத்தில் சந்திக்க உடனே வருமாறு அழைப்பு வந்தது. அங்கு சென்றேன் அப்போது, ரஷ்மானின் தாயாரும் அங்கு இருந்தார். அவர், உங்கள் மீது நான் எவ்வளவு மரியாதை வைத்து இருந்தேன். நீங்கள் இப்படி செய்யலாமா? தியாகராஜ பாகவதரை, ரஹ்மான் வணங்குவது போல காட்சி அமைத்து இருக்கிறீர்களே என சத்தம் போட்டார். இசையமைப்பாளர்களின் முன்னோடியாக இருந்தவர் தியாகராஜ பாகவதர். ஏ.ஆர்.ஆர். அவருக்கு மரியாதை செலுத்துவதாக அந்த காட்சி அமைக்கப்பட்டது. ஆனால், அவரது தாயார் ஹிந்து கடவுளை வணங்குவதாக நினைத்துக் கொண்டார். பிறகு, சன்.டி.வியை தொடர்பு கொண்டு வீடியோவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது” என்றார். மேலும், தசாவதாரம் படத்தில் கிடைத்த சில கசப்பான அனுபவங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த பல பொதுமக்கள், ஹிந்துவாக இருந்து மதம் மாறிய ஏ.ஆர். ரஹ்மான் இத்தனை தீவிர மதவெறி கொண்ட நபரா என விமர்சித்து வருகின்றனர்.