என்று தணியும் இந்த பிரியாணி மோகம்

சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மற்றும் சவர்மாவை வாங்கி சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட நபர்கள் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்ற செய்தி வெளியாகியது. இதைத்தொடர்ந்து ஒரு சிலர் காவல்துறையில் புகார் அளித்ததும் மாநகராட்சி உணவு பாதுகாப்புத் துறைக்கு காவல்துறை, மருத்துவமனைகளில் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்போது அந்த உணவகம் தினமும் மாலை 1 மணி தொடங்கி நள்ளிரவு வரை வியாபாரம் செய்யும் அந்தக் கடை அன்றைய தினம் மாலை 1 மணியை கடந்தும் திறக்கப்படவில்லை. மேலும் கடை உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர், கடையினை சீல் வைத்து விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இதேபோன்று பிரியாணி சாப்பிட்டு பலர் நகரின் பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது பிரச்சினைக்குள்ளாகிறார்கள். குறிப்பாக பல்லாவரம், தி.நகர், வியாசர்பாடி, பெரம்பூர் என பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை அவ்வப்போது தலைதூக்குகிறது. உணவு பாதுகாப்பு விஷயத்தில் பிரபல நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை சரிக்கட்டி தங்களது வியாபாரங்களை தொடருகின்றனர்.

ஆனால், ருசிக்கு ஆசைப்பட்டு வயிற்றையும், உடல்நலத்தையும் கெடுத்து பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் புற்றீசல்கள் போல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது இந்த பிரியாணி கடைகளே. தமிழகத்தில் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவில் முதலிடத்தை இந்த பிரியாணிக் கடைகளே ஆக்கிரமிக்கின்றன. முன்பெல்லாம் காரைக்குடி, செட்டிநாடு, முனியாண்டி விலாஸ், மிலிட்டரி ஓட்டல் என்று சாப்பிட்டு வந்த மக்கள் தற்போது படையெடுப்பது இந்த சர்ச்சைக்குரிய பிரியாணிக் கடைகளை நோக்கியே. நல்ல வியாபாரத்தோடு அதிக லாபம் சம்பாதிக்கும் இந்த கடைகள் மீதமாகும் இறைச்சியையோ உணவுகளையோ அன்றே அப்புறப்படுத்தாமல், பதப்படுத்தி மறுநாள் சுடச்சுட விநியோகம் செய்வதன் விளைவாக இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படுகின்றன என்கிறார்கள்.

(ஒரு தலைமுறைக்கு முன்பாக அரசு மக்களை பார்த்து பிள்ளை பெற்றுக் கொள்வதை குறையுங்கள். குடும்பத்திற்கு ஒன்றோ இரண்டோ போதும் என்று பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் இன்று குடும்பத்தில் வாரிசுகளை உருவாக்க குழந்தைப் பேறு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை பெற்றுக் கொள்கின்ற அவல நிலை தலைதூக்கியுள்ளது. துரித உணவு, அசைவ உணவு, பிரியாணி என்று கண்டகண்ட நேரங்களில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதன் விளைவாக உடல் பருமன், வயிற்று உபாதை, மலட்டுத் தன்மை என்று பல்வேறு பின்விளைவுகளை தமிழர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்த அசைவ உணவு வகைகள் நள்ளிரவு பிரியாணி, அதிகாலை பிரியாணி என்று விதவிதமாக மக்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஒரு தலைமுறையில் உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலுமாக திசை திரும்பி உள்ளது. குறிப்பாக இலங்கையில் பிரியாணிகளில் கருத்தடை மாத்திரைகளை கலந்து விநியோகித்த செய்தியை அறிந்திருப்போம். இன்றும் பல இடங்களில் அதுபோன்று நடக்கின்றதா  என்ற சந்தேகமும் ஏழாமல் இல்லை. காரணம் பிள்ளை பெற்றுக் கொள்ளும் பிரச்சினையில் 90 சதவீதத்துக்கும் மேல் எதிர்கொள்பவர்கள் பெரும்பான்மை சமூகத்தினரே.

ஹிந்து அறநிலையத்துறை நிர்வகிக்கும் ஹிந்துக் கோயில்களில் அன்னதானத்திற்கு ஆயிரம் விதிமுறை விதிக்கும் அரசு  நிர்வாகம் இதுபோன்ற மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு வகைகளில் தீவிர கண்காணிப்பை அமல்படுத்தாதது ஏன் என்ற கேள்வி எழாமல் எழுகிறது.

இதுபோன்ற அபாயங்களை தடுத்து நிறுத்த அசைவ உணவு விற்கும் உணவகங்களை தொடர் கண்காணிப்பில் வைத்து அவ்வப்போது சோதனையிட்டு உணவின் தரத்தை சரி செய்வது அரசின் தலையாய கடமையாகும். அப்போது தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து பசிக்கு சாப்பிடும் உணவைக் கூட பயமின்றி சாப்பிட முடியும்.                   F