இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். சில தினங்கள் கழித்துதான் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தார்கள். கொல்லப்பட்ட நஸ்ரலுல்லா ஒரு பயங்கரவாதி என்பதை மறைத்து ஒரு மாவீரானாக சித்தரிக்க முஸ்லீம்கள் தொடங்கியுள்ளார்கள். இதன் முதல் நிகழ்வு போராட்டம் என்ற பெயரில் காஷ்மீரிலும், இரண்டாவது சென்னை மீர்சாகிப்பேட்டை பகுதியில், பள்ளி வாசல் அருகே ஹசன் நஸ்ரல்லாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ‘பேனர்’ வைக்கப்பட்டு உள்ளது. இதில் இடம் பெற்று உள்ள வாசகங்கள், போலீசாருக்கு சவால் விடும் வகையில் உள்ளன.
நினைவு அஞ்சலி செலுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது. இரண்டாவது பள்ளிவாசல் அருகே பேனர் வைத்திருப்பது, ஜமாத்தின் அனுமதியில்லாமல் வைக்க முடியாது. குறிப்பாக அப்பகுதியில் வாழும் முஸ்லிம்களின் அனுமதியும் தேவைப்படுகிறது. எனவே மசூதியை நிர்வகிக்கும் ஜமாத் நிர்வாகிகளையும் காவல்துறை நுண்ணறிவு பிரிவு கண்காணிக்க வேண்டடியது அவசியமென தோன்றுகிறது.
இதுபற்றி காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பது தெரிய
வில்லை. இதுவே ஹிந்து இயக்கங்கள் இம்மாதிரியான பேனர்களை பொது இடத்தில் வைத்திருந்தால், காவல்துறையினர் துரிதகதியில், பேனர் அப்புறப்படுத்தியும், பேனர் வைத்த ஹிந்து பொறுப்பாளர்களை வீடு தேடி கைது செய்து இருக்கும். ஆனால், இந்த பேனர் வைத்த பொறுப்பாளர்கள் மீது என்ன நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டனர் என்பது தெரியவில்லை.
இதில் உலகத்தின் மாபெரும் வீரன், இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஹிஸ்புல்லா தலைவர் வீர மரணம் அடைந்தார்’ என, பேனரில் புகழாரம் சூட்டப்பட்டு, மண்டியிட்டு வாழ்வதை விட சத்தியத்துக்காக நிமிர்ந்து நின்று மடிவது மேல் -இமாம் அலி என குறிக்கப்பட்டுள்ளது. இமாம் அலி தீவிரவாதி என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற மமதையில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல பயங்கர
வாத தாக்குதலுக்கு மூளையாகயிருந்து செயல்பட்டவன் இந்த இமாம் அலி. பாரத தேசத்தில் எந்த மாநிலத்திலும் நிகழாத சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிக அளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்ப்பவர்களும், தீவிரவாத செயலில் ஈடுப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்ட பகுதி ராயப்பேட்டை.
கடந்த 2011ம் ஆண்டு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது சென்னையில் உள்ள மசூதியில் தொழுகை நடந்தது குறிப்பிடத்தக்கது. உலகத்தின் எந்த நாட்டில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும் அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி வெளிநாடுகளில் பயங்கரவாதிகள் கொல்லப்படும்போது அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு குரல் வருவது தமிழகத்திற்கு நல்லதல்ல. இந்த குரல் கூட முதலில் துவங்குமிடம் ராயப்பேட்டை மற்றும் மண்ணடி என்பதை மறக்க கூடாது. ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முயலவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
அதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீன இஸ்ரேல் போர் நடைபெற்ற போது சில முஸ்லிம் அமைப்புகள் பாலஸ்தீன கொடியுடன் தமிழகத்தின் பல பகுதிகளில் வலம் வந்தனர். இதையும் தமிழக உளவுத்துறை தடுக்க தவறியது. பல சமயங்களில் தமிழக காவல்துறையினர் கண்டு பிடிக்க வேண்டிய தீவிரவாதிகளை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்வது, பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. சமீபத்தில் தான், சென்னை ராயப்பேட்டை பகுதியில், ஹிஸ்ப் உத் தஹ்ரீர் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து, ரகசிய பயிற்சி மையம் நடத்தியது அம்பலத்துக்கு வந்தது.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தற்போது, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளதால், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பலர் இருக்கலாம் என்ற சந்தேகம் என்ஐஏவிற்கு எழுந்துள்ளது.
2022-ம் ஆண்டு கோயம்புத்தூர் கோவில் கார் வெடிகுண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி
களான 4 பேர்கள் பல முறை ராயப்பேட்டையில் உள்ள மசூதிகளில் தங்கியிருந்தார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதேபோல, கர்நாடக மாநிலம் பெங்களுரு ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் குண்டு வைத்த குற்றவாளிகள் ராயப்பேட்டை பகுதிகளில் தங்கியிருந்தனர்.
ராயப்பேட்டை, மீர்சாகிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அதிக அளவில் வசிப்பதாக மத்திய உளவு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது இவர்களுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட ஹசன் நஸ்ருல்லாவிற்கு போராளிகள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசி உள்ளதையும் கவனிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளன.