ஊக்கம் தந்த அமைச்சர்

தேச விடுதலையின் 75வது வருட டிஜிட்டல் மகோத்ஸவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘இளைஞர்களுக்கான பொறுப்புமிக்க செயற்கை நுண்ணறிவு’ என்ற திட்டத்தின் கீழ் நிலைத்தன்மை மிக்க செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களை உருவாக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தங்களது திறமையை நிரூபித்த பாரதம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த படைப்பாளிகளுடன் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உரையாடினார். குழந்தைகள் பாடப்புத்தகங்களிலிருந்து அறிவைப் பெற நினைக்கும் நேரத்தில், கல்வி முறையில் இது ஒரு தெளிவான மறுமலர்ச்சி ஆகும். 8, 9,10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் உயர் தரத்தில் புதுமைகளை உருவாக்குவது சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் தருகிறது என அவர்களை பாராட்டி ஊக்குவித்தார். முன்னாள் சிப் வடிவமைப்பாளரும், சிலிக்கான் பள்ளத்தாக்கில் பென்டியம் ப்ராசஸரை வடிவமைத்த குழுவில் அங்கம் வகித்தவர், நாட்டின் முன்னணி தொழில்நுட்ப வல்லுனர் மேலும் அலைபேசி தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவர் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.